குழந்தை பாக்கியம் தரும் சந்தானலட்சுமி ஸ்லோகம்!

 

குழந்தை பாக்கியம் தரும் சந்தானலட்சுமி ஸ்லோகம்!

சந்தானம் என்றால் குழந்தைகள் என்று அர்த்தம். குழந்தை பாக்கியத்தை வழங்குபவள் என்பதால் லட்சுமிக்கு சந்தான லட்சுமி என்று பெயர்.

சந்தான லட்சுமி தனது கைகளில் பூரண கும்பமும் கங்கணமும் அபய முத்திரையும் உடையவளாக இருக்கிறார். மடியில் குழந்தைகளுடன் உட்கார்ந்திருந்து, இருபுறமும் தீபமும் சாமரமும் ஏந்திய பெண்களால் வணங்கப்படுகிறார்.

குழந்தை பாக்கியம் தரும் சந்தானலட்சுமி ஸ்லோகம்!

இவரை வணங்கி வந்தால் நம்முடைய செல்வம் செழிக்கும், நம்முடைய பரம்பரைக்கு சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கச் செய்வார்.

சந்தானலட்சுமி ஸ்லோகம்:

ஜடாமகுட சம்யுக்தாம்

ஸ்த்தி தாசந சமந்விதாம்

அபயம் கடகஞ் சைவ

பூர்ணகும்பம் புஜத்வயே

கஞ்சுகம் ச்சந்த வீரஞ்ச

மெளக்திகம் சாபிதாரீணீம்

தீபசாமர நாரீபி:சேவிதாம்

பார்ச்வ யோர்த்வயோ

பாலே சேநாநி சங்காசே

கருணாபூரி தாநநாம்

மஹாராஞ் ஞீஞ்ச சந்தான

லக்ஷ்மீம் இஷ்டார்த்த ஸித்தயே

குழந்தை வரம் வேண்டுபவர்கள் மட்டுமின்றி சகல ஐஸ்வர்யங்களும் நிலைக்க இந்த ஸ்லோகத்தைச் சொல்லி வழிபாடு நடத்தலாம். கணவனும் மனைவியும் இணைந்து இந்த ஸ்லோகத்தைச் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு மற்றும் பௌர்ணமி தினங்களில் சொல்லி வர வேண்டும். இந்த நாட்களில் இனிப்பு நைவேத்தியம் செய்து வழிபட்டு அதை அருகில் உள்ள குழந்தைகளுக்கு வழங்கி வர வேண்டும். தொடர்ந்து சொல்லி வருபவர்களுக்குக் குழந்தை பாக்கியத்துடன் சகல செல்வங்களையும் வழங்கி அருள் புரிவார் சந்தானலட்சுமி!