காது, மூக்கு, தொண்டை டாக்டர் போல காக்கும் இந்த வள்ளியை ,அள்ளி அள்ளி சாப்பிடுங்க

 

காது, மூக்கு, தொண்டை டாக்டர் போல காக்கும் இந்த வள்ளியை ,அள்ளி அள்ளி சாப்பிடுங்க

நமது இந்திய நாட்டில் விளைகின்ற மருத்துவ மூலிகை வகைகள் அளவிற்கு உலகின் மற்ற நாடுகளில் விளைகின்ற மருத்துவ மூலிகைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவானது ஆகும். இதில்   நமது வீட்டு தோட்டங்களில் மூலிகைகள் மகத்துவம் என்ன என்பதை அறியாமலே பலரும் வளர்த்து வருகின்றனர். அப்படி பலராலும் அவர்களின் வீடுகளில் வளர்க்கப்படும் ஒரு மூலிகையாக “கற்பூரவள்ளி” செடி இருக்கிறது.

கற்பூரவள்ளி இலையை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். கற்பூரவள்ளி, ஓமவல்லி என்று அழைக்கப்படும் இந்த செடியானது பெருபாலான வீடுகளில் வளர்க்கப்படுகிறது. இது மூலிகை செடியாகும். பலருக்கு இதன் மகத்துவம் என்ன என்று தெரிவதில்லை. கற்பூரவள்ளி இலையின் ஊட்டச்சத்துக்கள் மற்றும் மருத்துவ நன்மைகளை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

காது, மூக்கு, தொண்டை டாக்டர் போல காக்கும் இந்த வள்ளியை ,அள்ளி அள்ளி சாப்பிடுங்க

ஊட்டச்சத்துக்கள் :

100 கிராம் கற்பூரவள்ளியில் இலையில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:

கொழுப்பு – 4.3 கிராம்

சோடியம் – 25 மிகி

பொட்டாசியம் – 1,260 மிகி

கார்போஹைட்ரேட் – 69 கிராம்

புரோட்டீன் – 9 கிராம் உள்ளது.

மேலும் வைட்டமின் ஏ – 34%

கால்சியம் – 159%

வைட்டமின் சி – 3%

இரும்புச்சத்து – 204%

வைட்டமின் பி6 – 50%

மற்றும் மக்னீசியம் – 67% உள்ளது.

கற்பூரவள்ளி நன்மைகள்

அஜீரணம்:

கற்பூரவள்ளி இலை அஜீரண கோளாறுகளைத் போக்கும். சில வகையான உணவுகளை சாப்பிடுவதாலும்,நேரங்கடந்து சாப்பிடுவதாலும் அஜீரண பிரச்சனை ஏற்படுகிறது. இப்படிபட்ட சமயங்களில் கற்பூரவள்ளி இலை சாற்றினை அருந்தினால் உணவுகளை எளிதில் செரிமானமடையச் செய்து அஜீரண கோளாறுகளைத் போக்கும்.

சுவாச பிரச்சனைகள்:

மழை மற்றும் குளிர்காலங்களில் சளி, ஜலதோஷம் ஏற்பட்டு மூக்கடைப்பு, மூக்கில் நீர் ஒழுகுதல் போன்றவை ஏற்பட்டால் கற்பூரவள்ளி இலைகளை நன்றாக பிழிந்து சாற்றை எடுத்து சில துளிகளை மூக்கில் விட்டு உறிஞ்ச மூக்கடைப்பு மற்றும் சைனஸ் பிரச்சனைகள் குறையும். கற்பூரவள்ளி இலை சாற்றை தொண்டையில் படுமாறு அருந்த வறட்டு இருமல், சளி தொந்தரவுகள் நீங்கும்.

கொலஸ்ட்ராலின் அளவை கட்டுப்படுத்தும்:

கற்பூரவள்ளி இலையில் டயட்டரி நார்ச்சத்துகள் அதிக அளவில் உள்ளது. கற்பூரவள்ளி இலைகளை தினமும் சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை சீராக வைக்க உதவுகிறது.

ஓமவல்லி பயன்கள்

காய்ச்சல்:

பருவ நிலை மாறுபாடு காரணமாக பலருக்கு காய்ச்சல், சளி போன்றவை ஏற்படுவது இயற்கையானது தான், இவர்கள் கற்பூரவள்ளி இலையை வாயில் போட்டு மென்று சாப்பிடுவது நல்லது. கற்பூரவள்ளி இலையில் உள்ள தைமோல் மற்றும் கார்வாக்ரோல் காய்ச்சலில் இருந்து விடுபட நல்ல பலன் அளிக்கும்.

நோய் எதிர்ப்பு மண்டலம்:

கற்பூரவள்ளி இலைகளை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி நோய்களின் தாக்கத்தை குறைக்க உதவுகிறது.

இரத்த அழுத்தம்:

கற்பூரவள்ளி இலையை சாப்பிட்டால் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும். இதில் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது. எனவே உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கற்பூரவள்ளி இலையை சாப்பிடுவது நல்லது.

முதுமைத் தோற்றம்:

கற்பூரவள்ளி இலையில் அதிக அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி போன்ற சத்துக்கள் உள்ளன. கற்பூரவள்ளி இலையை சாப்பிட்டு வந்தால் ப்ரீ ராடிக்கல்ஸ்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்து சிறுவயதில் ஏற்படும் முதுமைத் தோற்றத்தை தடுக்கிறது.நமது உடலின் மேற்பரப்பான தோலில் சில நுண்கிருமி தொற்றால் படை, சொறி, அரிப்பு போன்றவை ஏற்படுகின்றன. கற்பூரவள்ளி இலைகளை சிறிது பறித்து, நனவு கசக்கி அந்த  துளிகளை பாதிக்கப்பட்ட தோல் பகுதிகளில் விட்டு வந்தால் விரைவில் குணமாகும். .