மருதாணியால் கூந்தலுக்கு இத்தனை நன்மைகளா?

 

மருதாணியால் கூந்தலுக்கு இத்தனை நன்மைகளா?

பழங்காலத்தில் இருந்தே அழகுக் குறிப்பில் முக்கியப் பங்கு வகிப்பது மருதாணி. விழாக் காலங்களில் கைகளில் அரைத்து வைத்துக் கொள்ள பயன்படுத்தப்பட்ட மருதாணி, கூந்தல் பராமரிப்பிலும் இன்றியமையாததாக மாறிவிட்டது. பல இடங்களில் மருதாணி கிடைக்காததால், அவை தற்போது பொடி வடிவில் விற்கப்படுகிறது. இது முடிக்கு ஊட்டச்சத்து அளிப்பதோடு பல நன்மைகளை தருகிறது. அதன் நன்மைகளை இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம்…

மருதாணியால் கூந்தலுக்கு இத்தனை நன்மைகளா?

முடி வளர்ச்சி, உதிரல் கட்டுப்படுத்தல்:

முடி வளர்ச்சியை தூண்டும் பண்பு மருதாணியில் இயற்கையாகவே இருக்கிறது. அதனை பேக் ஆக போடலாம். இல்லையெனில் மருதாணி பொடியை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து இதமான சூட்டோடு கூந்தலில் தடவ வேண்டும். வாரம் 2 முறை இதை செய்தால் முடி வளர்ச்சியடையும்.

அதே போல பெரும்பாலான பெண்களுக்கு இருக்கும் முடி கொட்டுதல் பிரச்னையை இது மருதாணி கட்டுப்படுத்தும். கடுகு எண்ணெயுடன் சேர்த்து கூந்தலில் மசாஜ் செய்தால் முடிவு உதிருவது குறையும்.

மருதாணியால் கூந்தலுக்கு இத்தனை நன்மைகளா?

சிறந்த கண்டிஷனர், பொடுகு தொல்லை நீங்கும்:

பொதுவாக தலைக்கு குளித்த பிறகு முடி ட்ரை ஆகாமல் தடுக்க கண்டிஷனர் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், மருதாணி பயன்படுத்தினால் கண்டிஷனர் தேவையே இல்லை. தேயிலை தூளை மருதாணியுடன் கலந்து தயிர் சேர்த்து தலையில் பேக்- ஆக போடும் போது உச்சந்தலையில் ஆழமான கண்டிஷனராக மருதாணி செயல்படும்.

மருதாணி பொடுகுத் தொல்லையையும் போக்கும். ஊறவைத்த வெந்தயம், கடுகு எண்ணெய், மருதாணி தூள் சேர்த்து முடிவில் தடவி ஊறவைத்த பிறகு தலைக்கு குளித்தால் பொடுகு தொல்லை ஓய்ந்து விடும்.

மருதாணியால் கூந்தலுக்கு இத்தனை நன்மைகளா?

அரிப்பு நீங்கும், முடியின் நிறத்தை காக்கும்:

மருதாணியில் ஆண்டி மைக்ரோபியல் தன்மை இருக்கிறது. இது தலையில் ஏற்படும் அரிப்பு தன்மையை தடுக்க உதவுகிறது. மருதாணியுடன் துளசியை சேர்த்து அறைத்து உச்சந்தலையில் தடவினால் அரிப்பு நீங்கும். மருதாணி சிறந்த ஹேர் டையாகவும் செயல்படுகிறது. இந்த இயற்கை நிறம் கூந்தலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

மருதாணியால் கூந்தலுக்கு இத்தனை நன்மைகளா?

ஸ்பிளிட் எண்ட்ஸ்:

கூந்தல் பிளவு பட்டு இருப்பதை கட்டுப்படுத்த மருதாணி உதவும். மருதாணியுடன் முட்டை, வெண்ணெய் சேர்த்து முடியின் இழைகளில் தேய்த்து விட்டு பின்பு கழுவி விட்டால் ஸ்பிளிட் எண்ட்ஸ் நீங்கும். இதில் இருக்கும் ஆண்டி மைக்ரோபியல் தன்மை சருமத்தின் பி.ஹெச் அளவையும் பராமரிக்கிறது.

மருதாணியால் கூந்தலுக்கு இத்தனை நன்மைகளா?

கூந்தலை மென்மையாக்கும்:

முடியின் வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் மருதாணி, முடியை மென்மையாக வைத்திருக்க உதவுகிறது. வாழைப்பழத்துடன் மருதாணியை சேர்த்து 8 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு, அந்த பேஸ்ட்டை தலையில் தேய்த்தால் கண்டிஷனர் இல்லாமலேயே கூந்தல் மென்மையாக இருக்கும்.

உலர்ந்த கூந்தலுக்கும்(ட்ரை ஹேர்) மருதாணி ஒரு சரியான தீர்வு. மருதாணி, ஆலிவ் எண்ணெய் மற்றும் தேங்காய்ப் பாலை ஒன்றாக கலந்து கூந்தலில் தடவ வேண்டும். ஒரு மணி நேரத்துக்கு பிறகு தலைக்கு குளித்துவிட்டு கண்டிஷனர் பயன்படுத்தினால் கூந்தலின் உலர்ந்த தன்மை நீங்கும்.