சேப்பங்கிழங்கில் இத்தனை நன்மைகளா?

 

சேப்பங்கிழங்கில் இத்தனை நன்மைகளா?

சேப்பங்கிழங்கு… மிகச் சாதாரணமாக கடைகளில் விற்கப்படும் இந்தக் கிழங்கும் அதன் முழு செடியும் பல்வேறு மருத்துவக் குணங்களைக் கொண்டது. உலர்ந்த நிலையில் ஆண்டு முழுக்க கிடைக்கும் இந்தக் கிழங்கு ஒரு ஓரத்தில் ஒதுக்கப்பட்டுக் கிடக்கும். காரணம், இந்தக் கிழங்கின் மருத்துவக் குணம் பலருக்குத் தெரியாததே. இதுபற்றி மூலிகை ஆராய்ச்சியாளர் தமிழ்க்குமரன் சொல்வதைக் கேட்போம்.

சேப்பங்கிழங்கில் இத்தனை நன்மைகளா?மூலம் – வெள்ளைப்படுதல்:
“சேப்பங்கிழங்கு, சோம்பு, சேனை, சாமைக்கிழங்கு, சேமங்கிழங்கு, சேமைக்கிழங்கு என்ற பெயர்களில் அழைக்கப்படும் இந்த கிழங்கின் செடி மெல்லிய தண்டினையும் அடியில் கிழங்குகளையும் கொண்டிருக்கும். இதன் கிழங்கு மட்டுமல்ல தண்டு மற்றும் இலையையும்கூட சமைத்துச் சாப்பிடலாம். புளி சேர்க்காமல் சமைத்துச் சாப்பிடக்கூடாது. புளிக்குழம்பு வைப்பவர்கள் இந்த தண்டினை அதனுடன் சேர்த்துச் சமைத்துச் சாப்பிடலாம். இலையில் டோக்ளா செய்து சாப்பிட சுவையாக இருக்கும்.

வழுவழுவென்றிருக்கும் இந்த சேப்பங்கிழங்கைச் சமைத்துச் சாப்பிட்டால் மூல நோய் குணமாகும். இந்த கிழங்கைச் சாப்பிடுவதால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் சரியாகும். பூரான், வண்டு கடித்த இடத்திலும் குளவி கொட்டிய இடத்திலும் இதன் இலைச்சாற்றைப் பூசினால் வலி குறையும். வெட்டுக்காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறும்போது இதன் இலைச்சாற்றை ஊற்றினால் ரத்தம் நிற்பதுடன் ரணம் ஆறும்.

சேப்பங்கிழங்கில் இத்தனை நன்மைகளா?கழிவுநீர் சுத்திகரிக்கும்:
மருத்துவக் குணங்கள் நிறைந்த இந்தச் செடியை வீடுகளில் மிக எளிதாக வளர்க்கலாம். கடைகளில் விற்கும் சேப்பங்கிழங்கை வாங்கி வந்து மண்ணில் புதைத்துவைத்தால் மிக எளிதாக வளரும். இதன் இலைகளை ஆடு, மாடுகள் சாப்பிடாது என்பதால் வீட்டின் வெளிப்புறங்களில் சேப்பங்கிழங்கை நட்டு வளர்க்கலாம். இதன் இலைகள் பரந்து விரிந்து வளரும் என்பதால் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

சேப்பங்கிழங்கில் இத்தனை நன்மைகளா?சேப்பங்கிழங்கை வீட்டின் வெளிப்புறம் மட்டுமல்லாமல் குளியலறை மற்றும் சமையலறையிலிருந்து நீர் வெளியேறும் இடங்களில் நட்டு வைக்கலாம். இப்படி நட்டு வைத்தால் அந்த கழிவுநீரில் கலந்திருக்கும் சோப்பு உள்ளிட்ட ரசாயனக்கலவைகளை உள்ளிழுத்துக் கொண்டு நீரை சுத்திகரித்துவிடும். ஆகவே, கழிவுநீர் வெளியேறும் இடங்களில் சேப்பங்கிழங்கை நட்டு பலன் பெறலாம்”.