நோய் எதிர்ப்பு சக்தி பத்தலைன்னு சொல்றவங்களுக்கு உதவும் வெத்தலை -எப்படி சாப்பிடணும் தெரியுமா ?

 

நோய் எதிர்ப்பு சக்தி பத்தலைன்னு சொல்றவங்களுக்கு உதவும் வெத்தலை -எப்படி சாப்பிடணும் தெரியுமா ?

பொதுவாக வெற்றிலையை நல்ல சாப்பாட்டுக்குப் பின் நாம் உண்பதை வழக்கமாகக் கொண்டுள்ளோம். நாம் அனைவரும் அறிந்தது என்னவென்றால் வெற்றிலை போட்டால் வாய் மணக்கும். நல்ல மதிய உணவு விருந்துக்குப் பின் வெற்றிலை பரிமாறுவதைப் பாரம்பரியமாகக் கொண்டுள்ளோம். நாம் அனைவரும் நினைத்து என்னவென்றால் வெற்றிலை புத்துணர்ச்சிக்காக மட்டுமே உபயோகம் செய்யப்படுகிறது என்று. ஆனால் அதையும் மீறி பல நம்ப முடியாத நல்ல விஷயங்கள் வெற்றிலையில் உள்ளது என்பதை நாம் பலரும் அறியவில்லை. முன் காலத்தில் கோவில் பூஜைகள் முதல் மருந்துகள் வரை வெற்றிலையை பல விதமாக உபயோகித்து வந்துள்ளோம்.

பொதுவா வெற்றிலை வயிறு சம்மந்தமான-ஜீரண மண்டல கோளாறுகளுக்கு நல்ல தீர்வு. மலச்சிக்கல் போன்ற பிரச்சனைக்கும் நல்ல மருந்தா இருக்கு. வெற்றிலைச் சாறோட (15 மி.லி) இஞ்சிச் சாறு (15 மி.லி) சேத்து நுரையீரல் சம்பந்தமான நோய்களுக்காக கொடுத்து வந்தா நல்ல பலன் இருக்கும். வெற்றிலைச்சாறோட கடுகளவு சுண்ணாம்பு கலந்து (சுண்ணாம்பின் அளவு அதிகமானால் தோலில் எரிச்சல் உண்டாகும் என்பதை கவனத்தில் கொள்க) குழந்தைகளுக்கு (6 வயதிற்கு மேல்) தொண்டக் குழியில போட்டா இருமல், சுவாசப் பிரச்சனைகள் நீங்கும். தீப்பட்ட புண் மேல வெற்றிலைய இடிச்சு கட்டி வெச்சா புண் அழற்சி குறையும். தலை வலி, மூட்டு வலி இருக்கும்போது வெற்றிலைச் சாற்ற தடவினா வலி நீங்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி பத்தலைன்னு சொல்றவங்களுக்கு உதவும் வெத்தலை -எப்படி சாப்பிடணும் தெரியுமா ?

வெற்றிலையில சாதாரண வெற்றிலை, கம்மாறு வெற்றிலை, கற்பூர வெற்றிலைனு 3 வகை இருக்கு. கற்பூர வெற்றிலை கற்பூர மணத்தோட சிறுகாரத்தோட இருக்கும். கம்மாறு வெற்றிலை கருமையா நல்ல காரத்தோட இருக்கும்.

காம்பு, நுனி, நடு நரம்பு ஆகியவற்றை நீக்கிவிட்டுத்தான் வெற்றிலையை போட வேண்டுமாம்!

வெற்றிலை போடுவெதெல்லாம் சரிதான்ஆனால் வெற்றிலையைப் போட்டு எச்சிலை கண்ட இடத்தில் துப்பாமல் இருப்பது மிகவும் முக்கியமானது

வெற்றிலையை சாப்பிடும் முறை

வாய் துர்நாற்றம்: தினமும் ஒரு வெற்றிலையை மென்றுவந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.

மலச்சிக்கல்: 30 மி.லி. அளவு வெற்றிலைச் சாற்றை வெறும் வயிற்றில் குடிக்கலாம் (அ) வெற்றிலையை இடித்து இரவு நீரில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் அந்நீரை குடித்து வரலாம்.

வயிறு பொருமல் மற்றும் மலக்கட்டு: 6 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு வயிறு பொருமல் மற்றும் மலக்கட்டு பிரச்சனைகள் நீங்க, வெற்றிலைக் காம்பை விளக்கெண்ணெயில் நனைத்து கீழ்வாயில் வைக்கலாம்.

செரியாமை: 2-3 வெற்றிலையுடன் 4-5 மிளகுகள் சேர்த்து இடித்து தண்ணீரில் கலந்து கொடுக்க சிறுவர்களுக்கு செரியாமை பிரச்சனை தீரும்.

இருமல், மூச்சு முட்டல், கடின சுவாசம்: வெற்றிலையை நல்லெண்ணெயில் நனைத்து விளக்கில் வாட்டி மார்பின் மீது போட்டால் குழந்தைகளுக்கு (6 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டும்) உண்டாகும் இருமல், மூச்சு முட்டல், கடின சுவாசம் ஆகியவை தீரும்.

குழந்தை பெற்ற பெண்களுக்கு: குழந்தை பெற்ற பெண்களுக்கு பால் சுரக்கவும், பால் கட்டியினால் உண்டாகும் மார்பக வீக்கத்தைக் கரைக்கவும் வெற்றிலையை தணலில் வாட்டி அடுக்கடுக்காக வைத்து மார்பகத்தில் கட்டலாம்.

வெற்றிலையில் இயற்கையாக உள்ள வேதிப்பொருட்கள் மூச்சு முட்டல் போன்ற சுவாச கோளாறுகளைச் சரி செய்கிறது. மேலும் குளிர்காலத்தில் ஏற்படும் ஜலதோஷம் இருமல் போன்றவற்றிற்குப் பெருமளவில் உதவி செய்கிறது. ஆஸ்துமா போன்ற நோய்களுக்கும் வெற்றிலையைப் பயன்படுத்துகிறார்கள்.வெற்றிலையில் சிறிது கடுகு எண்ணெய் தடவிச் சூடு செய்து அதை நெஞ்சில் வைத்தால் சளி இருமல் போன்றவை குறையும். மேலும் சிறு வெற்றிலைகளைத் தண்ணீரில் போட்டு அதனுடன் சீரகம் லவங்கப் பட்டை ஆகியவை சேர்த்துச் சூடு செய்து தினமும் ஒன்று முதல் இரண்டு நேரங்கள் குடித்து வந்தால் சுவாச கோளாறுகளிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.