மீண்டும் நம்மை முடக்கி போட வரும் கொரானா மூன்றாம் அலையை ,அடக்கி வைக்கும் அதிமதுரம்

 

மீண்டும் நம்மை முடக்கி போட வரும் கொரானா மூன்றாம் அலையை ,அடக்கி வைக்கும் அதிமதுரம்

தற்காலங்களில் உலகெங்கிலும் கொரானா மூன்றாம் அலைகள் உருவாகி வருகிறது. சித்த மருத்துவம், ஆயர்வேதம் போன்ற முறைகளை நாடி மேலை நாட்டவர்களே நம் நாட்டிற்கு வரும் போது, மக்கள் ரசாயனங்கள் மிகுந்த ஆங்கில மருந்துகளை நாடுகின்றனர். நமது இந்திய நாடு “மூலிகைகளின் சுரங்கம்” என்று சொன்னால் அது மிகையாகாது. நமது நாட்டில் வளரும் உயிரை காக்கும் மூலிகைகளில் ஒன்று தான் “அதிமதுரம்”. அதிரமதுரத்தின் பல்வேறு மருத்துவ பயன்கள் குறித்து இங்கு அறிந்து கொள்ளலாம்.

கால்சியம், ஆண்டியாக்சிடெண்டுகள், நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் புரதங்கள் நிறைந்த அதிமதுரம் ஆயுர்வேதத்தில் மருந்தாகப் பயன்படுத்தப்படும் ஒரு மூலிகையாகும். அதிமதுரம் நம் உடலை பல நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் ஒவ்வொரு நாளும் வெறும் வயிற்றில் அதிமதுரம் கொண்டு செய்யும் கஷாயத்தைக் குடிக்கத் துவங்கினால், அது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் பயனளிக்கும்.

அதிமதுரம் கொண்டு கஷாயம் தயாரிப்பது எப்படி?

ஒரு கிளாஸ் தண்ணீரில் 6-7 கருப்பு மிளகை அரைத்து அல்லது பொடி செய்து போடவும். அதில் ஒரு துண்டு அதிமதுரத்தைப் போடவும். அதனுடன் துளசியின் (Tulsi) 7-8 இலைகளை சேர்க்கவும். இதற்குப் பிறகு, ஒரு துண்டு இஞ்சியை எடுத்து அரைத்து தண்ணீரில் சேர்த்து குறைந்த சூட்டில் கொதிக்க விடவும். இது கொதித்து பாதியாக குறைந்தவுடன், ​​அதில் 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து இரண்டு அல்லது மூன்று கொதி வரவிடுங்கள். இதற்குப் பிறகு, இதை வடிகட்டி, ஆர வைத்து சிறிதளவு தேன் சேர்த்து குடிக்கவும். இந்த அதிமதுரத்தின் கஷாயத்தை காலையில் குடிப்பதால் அதிக நன்மைகள் ஏற்படும்.

மீண்டும் நம்மை முடக்கி போட வரும் கொரானா மூன்றாம் அலையை ,அடக்கி வைக்கும் அதிமதுரம்

அதிமதுரம் கஷாயம் குடிப்பதன் நன்மைகள்

– அதிமதுரம் கஷாயம் கொரோனா வைரஸைத் (Coronavirus) தவிர்க்க உதவுவது மட்டுமல்லாமல், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மீட்பு செயல்முறையை விரைவுபடுத்தவும் உதவுகிறது (மீளும் வேகத்தை அதிகரிக்கிறது).

-அதிமதுரத்தில் ஆண்டியாக்சிடெண்டுகள் மற்றும் ஆண்டிபயாடிக் பண்புகள் உள்ளன. அவை கீழ்வாதத்தால் ஏற்படும் வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவும். கீழ்வாதம் நோயாளிகளுக்கு, அதிமதுரம் கஷாயம் கொடுப்பது நன்மை பயக்கும்.

– தொண்டையில் இருமல் இருந்தாலும் அதிமதுரம் மிகவும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. யாருக்காவது கபத்தால் பிரச்சனை ஏற்பட்டால், அதிமதுரத்தை கஷாயமாக வைத்துக் கொடுக்கலாம். இதனால் உடனடி பலன் கிடைக்கும்.  

தொண்டை அதிரமதுரத்தை சிறிதளவு எடுத்து வாய்க்குள் போட்டு அதக்கி கொள்வதால் அதிகளவு உமிழ்நீர் சுரக்கும். இந்த உமிழ்நீர் சிறிது சிறிதாக தொண்டைக்குள் இறங்கி தொண்டையில் சளித்தொல்லையால் ஏற்படும்  கரகாரப்பை நீக்கும். சளியால் ஏற்படும் தொண்டைகட்டையும் சீக்கிரத்தில் குணமாகும். சிறிதளவு அதிமதுரத்தை தூய்மையான பசுப்பாலில் ஊறவைத்து, பிறகு நன்கு அரைத்து அந்த விழுதை தலையில் நன்கு ஊரும் வகையில் அழுத்தி தேய்த்து, சுமார் இரண்டு மணிநேரம் கழித்து தலைக்கு குளித்தால் தலைமுடி உதிர்வது குறையும். தலயின் தோல்களில் இருக்கும் சிறு புண்கள் ஆறும். இள நரை நீங்கும். முடி பட்டு போன்று மென்மையாகும்.