சட்டமன்றத்துக்குள் பீர் பாட்டில்கள்! வைரலாகும் புகைப்படம்

 

சட்டமன்றத்துக்குள் பீர் பாட்டில்கள்! வைரலாகும் புகைப்படம்

கர்நாடக மாநிலத்தில் இன்று துவங்கி பத்து நாட்களுக்கு மழைகால கூட்டத்தொடர் நடைபெறுகிறது. இந்நிலையில் விதானன் சௌதா சட்டமன்ற வளாகத்தில் இரண்டாவது மாடியின் கழிவறை அருகே பீர் பாட்டில்கள் இரண்டு வைக்கப்பட்டு இருக்கும் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்து விதான் சௌதா காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சட்டமன்றத்துக்குள் பீர் பாட்டில்கள்! வைரலாகும் புகைப்படம்

இதனிடையே 30 வருடங்களுக்கு பிறகு சட்டமன்றத்தில் நான்காவது வரிசையில் அமர்ந்து அவை நிகழ்வில் எடியூரப்பா கலந்து கொண்டார். முதல்வராக இருந்த எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் தற்பொழுது எந்தவித பதவியும் இல்லாமல் வெறும் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இன்று சட்டமன்றத்திற்கு வந்த எடியூரப்பா, சுமார் 30 வருடங்களுக்கு பிறகு முதல் வரிசையில் அமராமல் அவையில் நான்காவது வரிசையில் அமர்ந்து நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.முதல்வராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் முதல் வரிசையிலேயே எப்போதும் சட்டமன்றத்தில் அமர்ந்திருந்த எடியூரப்பா இன்று நான்காவது வரிசையில் கொறடா அருகே அமர்ந்திருந்தார்.

முதல் வரிசையில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை அமர்ந்திருந்த நிலையில் இரண்டு மற்றும் மூன்றாவது வரிசையில் அமைச்சர்கள் அமர்ந்திருந்தனர். அதன்பிறகு நான்காவது வரிசையில் எடியூரப்பா கோரிக்கையின் படி அமர இன்று இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. எடியூரப்பாவை போல முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தனக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என்று மறுப்பு தெரிவித்த நிலையில் எடியூரப்பா அருகே நான்காவது வரிசையில் இன்று அமர்ந்திருந்தார்