எந்த துறையிலும் ஜொலிப்பேன்! வருவாய் துறையில் வருவாய் ஈட்டிய பீலா ராஜேஷ்

 

எந்த துறையிலும் ஜொலிப்பேன்! வருவாய் துறையில் வருவாய் ஈட்டிய பீலா ராஜேஷ்

தமிழக சுகாதாரத் துறை இருந்தவராக இருந்த பீலா ராஜேஷ் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்ததாக, புதிய பங்களா கட்டியதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் அவர் சுகாதாரத் துறை செயலாளர் பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டார். சுகாதாரத் துறை செயலாளராக ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார்.

முன் எப்போதும் இல்லாத அளவாக, நேற்று ஒரே நாளில் 20307 பத்திர பதிவு நடைபெற்று உள்ளதாக, தமிழக பத்திரப்பதிவு & வணிகவரித் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதில் 50% அதாவது 10 ஆயிரம் ஆவணங்கள்,சென்னை, கோவை, மதுரை மண்டலங்களில் மட்டுமே பதிவாகி உள்ளன. இதன் காரணமாக அரசுக்கு முத்திரை வரி, பதிவு கட்டணம் என 123.35 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

எந்த துறையிலும் ஜொலிப்பேன்! வருவாய் துறையில் வருவாய் ஈட்டிய பீலா ராஜேஷ்

கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி 20 ஆயிரம் பத்திரப் பதிவு நடைபெற்றது என்றும், இதன் காரணமாக அரசுக்கு முத்திரை வரி, பதிவு கட்டணம் என 90 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது என்றும் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். கொரானா காரணமாக, பத்திரப்பதிவு குறைந்து இருந்த நிலையில் தற்போது மீண்டும் படிப்படியாக பதிவு உயர்ந்து வருவதை இதை காட்டுகிறது.

ஏப்ரல் – ஜூன் மாதங்களில் பதிவு செய்யாதவர்கள் தற்போது பதிவு செய்ய வருவதால் எண்ணிக்கை உயர்வதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 20 ஆயிரம் பதிவுகள், கடந்த 2008 ஆம் ஆண்டில் ஒருநாள் பதிவாகி இருந்தது. அதுவே சாதனையாக பார்க்கப்பட்ட நிலையில் கடந்த செப்டம்பர் மாதம், 4 ஆம் தேதி அதிகபட்சமாக 19 ஆயிரம் பத்திர பதிவுகள் நடைபெற்றுள்ளன. கடந்த ஆகஸ்ட் மாதம் 800 கோடி ரூபாய் பத்திர பதிவு மூலம் வருவாய் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.