பீலாராஜேஷ் அதிரடி மாற்றம்… சுகாதாரத் துறை செயலாளர் ஆனார் ராதாகிருஷ்ணன்!

 

பீலாராஜேஷ் அதிரடி மாற்றம்… சுகாதாரத் துறை செயலாளர் ஆனார் ராதாகிருஷ்ணன்!

சுகாதாரத் துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் வணிக வரித்துறைக்கு அதிரடியாக இட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை கொரோனா தடுப்பு சிறப்பு அதிகரியாக இருந்து வரும் ராதாகிருஷ்ணன் சுகாதாரத் துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பீலாராஜேஷ் அதிரடி மாற்றம்… சுகாதாரத் துறை செயலாளர் ஆனார் ராதாகிருஷ்ணன்!
தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று வெளியிட்டுள்ள பணி இட மாற்ற உத்தரவில், “தமிழக சுகாதாரத் துறை செயலாளராக பணியாற்றி வரும் பீலா ராஜேஷ் வணிக வரி மற்றும் பதிவுத் துறை செயலாளராக இட மாற்றம் செய்யப்படுகிறார். இதுவரை இந்த துறையை முருகானந்தம் ஐ.ஏ.எஸ் கூடுதலாக கவனித்து வந்தார்.
வருவாய் நிர்வாகத் துறை செயலாளர் மற்றும் ஆணையராக பணியாற்றி வந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் தமிழக சுகாதாரத் துறை செயலாளராக நியமிக்கப்படுகிறார். வருவாய் நிர்வாகத் துறையை மறு உத்தரவு வரும் வரை டாக்டர் ராதாகிருஷ்ணன் கூடுதலாக கவனிப்பார்” என்று கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தடுப்புப் பணியில் பல்வேறு அதிகார மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த அதிகார மையத்தில் பீலா ராஜேஷ் தற்போது அதிரடியாக வெளியேற்றப்பட்டுள்ளார்.