“நாட்டுடன் பிசிசிஐ துணை நிற்கும்… 2,000 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கும்” – கங்குலி அறிவிப்பு

 

“நாட்டுடன் பிசிசிஐ துணை நிற்கும்… 2,000 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கும்” – கங்குலி அறிவிப்பு

கொரோனா இரண்டாம் அலையால் இந்தியாவே உருக்குலைந்து போய் உள்ளது. முதல் அலையைக் காட்டிலும் இரண்டாம் அலையில் அதிகமான ஆக்சிஜன் தேவைப்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் ஏராளமான மக்கள் உயிரிழப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இச்சூழலில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதிலும், அதனைக் கொண்டுசெல்வதிலும் பெரும் சிக்கல் எழுந்துள்ளது.

“நாட்டுடன் பிசிசிஐ துணை நிற்கும்… 2,000 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கும்” – கங்குலி அறிவிப்பு

இந்தியாவின் நிலையைக் கண்டு பல்வேறு உலக நாடுகள் உதவ முன்வந்துள்ளன. அதேபோல தனியார் நிறுவனங்களும் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்கின்றனர்.அந்த வகையில் பிசிசிஐ இந்தியாவிற்கு உதவ முன்வந்துள்ளது. அதன்படி 2 ஆயிரம் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கவிருப்பதாகத் தெரிவித்துள்ளது. இது குறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி வெளியிட்டுள்ள அறிக்கையில் “கொரோனா வைரஸ்க்கு எதிரான போரில் மருத்துவத் துறைக்கு துணை நிற்கும் முயற்சியில் பிசிசிஐ ஈடுபட்டுள்ளது.

நெருக்கடியான இந்தக் காலக்கட்டத்தில் நாட்டுடன் துணை நிற்கும் விதமாக ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இவை கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்களுக்கு உதவும். அதன்படி 10 லிட்டர் திறன் கொண்ட 2 ஆயிரம் ஆக்சிஜன் செறிவூட்டிகளை பிசிசிஐ வழங்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.