கவர்னர் உங்களை சந்திக்க விரும்பினால் நீங்கள் சந்திக்க வேண்டும்… அப்படிதான் அது… சவுரவ் கங்குலி

 

கவர்னர் உங்களை சந்திக்க விரும்பினால் நீங்கள் சந்திக்க வேண்டும்… அப்படிதான் அது… சவுரவ் கங்குலி

கவர்னர் உங்களை சந்திக்க விரும்பினால் நீ்ங்கள் அவரை சந்திக்க வேண்டும் அப்படிதான் அந்த சந்திப்பு நடந்தது என்று மேற்கு கவர்னர் ஜகதீப் தங்கருடன் சந்திப்பு குறித்து பி.சி.சி.ஐ. தலைவர் சவுரவ் கங்குலி விளக்கம் கொடுத்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் பா.ஜ.க. மிகவும் தீவிரமாக உள்ளது. அதற்காக பல அதிரடி நடவடிக்கைகளை அந்த கட்சி மேற்கொண்டு வருகிறது. எதற்கும் அசராத திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜியே பா.ஜ.க.வின் அசுர வளர்ச்சி கண்டு கொஞ்சம் ஜெர்க்காகி உள்ளார். மேற்கு வங்கத்தில் சவுரவ் கங்குலியை பா.ஜ.க. களமிறக்கும் என்று நீண்ட நாட்களாக பேசப்பட்டு வருகிறது.

கவர்னர் உங்களை சந்திக்க விரும்பினால் நீங்கள் சந்திக்க வேண்டும்… அப்படிதான் அது… சவுரவ் கங்குலி
சவுரவ் கங்குலி

இந்த சூழ்நிலையில் நேற்று முன்தினம் மேற்கு வங்க கவர்னர் ஜகதீப் தங்கரின் அழைப்பு ஏற்று சவுரவ் கங்குலி அவரை சந்தித்தார். அப்போது அவர்கள் இருவரும் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியுள்ளனர். இது தொடர்பாக கவர்னர் ஜகதீப் தங்கர் டிவிட்டரில், ராஜ் பவனில் பி.சி.சி.ஐ. தலைவர் தாதா சவுரவ் கங்குலியுடன் நேற்று முன்தினம் மாலை 4.30 மணியளவில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து உரையாடினேன். 1984ம் ஆண்டில் நிறுவப்பட்ட நாட்டின் பழமையான கிரிக்கெட் மைதானமான ஈடன் கார்டனுக்கு வரும்படி அவர் விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்டேன் என்று பதிவு செய்து இருந்தார்.

கவர்னர் உங்களை சந்திக்க விரும்பினால் நீங்கள் சந்திக்க வேண்டும்… அப்படிதான் அது… சவுரவ் கங்குலி
அமித் ஷா

கவர்னர்-கங்குலி சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறப்பட்டாலும், இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் புதிய யூகங்களை கிளப்பி விட்டது. இந்நிலையில் கவர்னர் ஜகதீப் தங்கருடான சந்திப்பு குறித்து சவுரவ் கங்குலி கூறுகையில், கவர்னர் உங்களை சந்திக்க விரும்பினால் நீங்கள் சந்திக்க வேண்டும். அப்படித்தான் இந்த சந்திப்பை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று விளக்கம் கொடுத்தார். மேற்கு வங்கத்தில் அடுத்த முதல்வர் மண்ணின் மைந்தராகத்தான் இருப்பார் என்று அமித் ஷா அண்மையில் அம்மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.