கொரோனா எதிரொலி: ஆசிய கிரிக்கெட் கோப்பை தொடர் ரத்து – பிசிசிஐ

 

கொரோனா எதிரொலி: ஆசிய கிரிக்கெட் கோப்பை தொடர் ரத்து – பிசிசிஐ

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 4 மாதங்களாக எந்தவிதமான கிரிக்கெட் போட்டிகளும் நடத்தப்படாமல் தடைபட்டுள்ளன. உலகின் பணக்கார டி20 தொடரான ஐபிஎல் கொரோனா தொற்றால் நடைபெறாமலேயே உள்ளது. இதற்கிடையில் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் கிரிக்கெட் போட்டி சவுத்தாம்ப்டனில் இன்று தொடங்கி நடைபெற்றுவருகிறது. ஆனால் இந்த தொடரிலும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதற்கிடையில் இந்திய ரசிகர்கள் ஐபிஎல்க்காக காத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் கொரோனா போகிற போக்கை பார்த்தால் ஐபிஎல் தொடர் எப்போது நடைபெறும், நடைபெறுமா? இல்லையா? என்பது உறுதியாக தெரியவில்லை.

கொரோனா எதிரொலி: ஆசிய கிரிக்கெட் கோப்பை தொடர் ரத்து – பிசிசிஐ

இந்நிலையில் ஐக்கிய அமீரகத்தில் வரும் செப்டம்பர் மாதம் நடத்தப்பட இருந்த ஆசிய கிரிக்கெட் கோப்பை தொடர் கொரோனா தொற்றால் ரத்து செய்யப்படுவதாக பிசிசிஐ தலைவர் கங்குலி அறிவித்துள்ளார். இந்த தொடரில் ஆஸிய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், வங்க தேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய நான்கு நாடுகள் மட்டுமே கலந்துகொள்ளும் என்பது குறிப்பிடதக்கது.