லாக்டவுனால் செருப்பு விற்பனை சுமாரு.. ரூ.101 கோடி நஷ்டத்தை சந்தித்த பாட்டா

 

லாக்டவுனால் செருப்பு விற்பனை சுமாரு.. ரூ.101 கோடி நஷ்டத்தை சந்தித்த பாட்டா

பிரபல காலணிகள் தயாரிப்பு நிறுவனமான பாட்டா இந்தியா நிறுவனம் கடந்த ஜூன் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2020 ஜூன் காலாண்டில் பாட்டா இந்தியா நிறுவனத்துக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.100.88 கோடி நிகர நஷ்டம் ஏற்பட்டுள்ளது. சென்ற ஆண்டின் இதே காலாண்டில் (2019 ஜூன் காலாண்டு) பாட்டா இந்தியா நிறுவனம் நிகர லாபமாக ரூ.100.97 கோடியை ஈட்டியிருந்தது.

லாக்டவுனால் செருப்பு விற்பனை சுமாரு.. ரூ.101 கோடி நஷ்டத்தை சந்தித்த பாட்டா

கடந்த ஜூன் காலாண்டில் லாக்டவுன் காரணமாக செருப்பு உள்ளிட்ட பல்வேறு விதமான காலணிகள் விற்பனை குறைந்தது இதனால் பாட்டா இந்தியா நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ரூ.135.07 கோடியாக குறைந்தது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 84.69 சதவீதம் குறைவாகும். 2019 ஜூன் காலாண்டில் பாட்டா இந்தியா நிறுவனம் செயல்பாட்டு வருவாயாக ரூ.882.75 கோடி ஈட்டியிருந்தது.

லாக்டவுனால் செருப்பு விற்பனை சுமாரு.. ரூ.101 கோடி நஷ்டத்தை சந்தித்த பாட்டா

பாட்டா இந்தியா நிறுவனத்தின் நிதிநிலை முடிவுகள் குறித்து அந்நிறுவனத்தின் தலைமை செயல்அதிகாரி சந்தீப் கட்டாரியா கூறுகையில், பாட்டா இந்தியா நிறுவனத்தின் வரலாற்றில் இது முன்எப்பொழுதும் இல்லாத காலாண்டாகும். தொற்றுநோய் காரணமாக மத்திய அரசு நடைமுறைப்படுத்திய லாக்டவுனால் எங்களுக்கு விற்பனை குறைவாக இருந்தது மற்றும் உற்பத்தியும் நடைபெறவில்லை. எங்களது வாடிக்கையாளர் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை மனதில் வைத்து நாங்கள் மீண்டும் செயல்பாட்டை தொடங்கினோம். இதன் அடிப்படையில் முடிவுகளை பார்க்க வேண்டும் என தெரிவித்தார்.