“Bat” புடிச்ச கையால் “பெண்”ணை பிடிக்க போகும்  ஹார்டிக் பாண்ட்யா-  செர்பிய நடிகையுடன்    நிச்சயதார்த்தம் .

“Bat” புடிச்ச கையால் “பெண்”ணை பிடிக்க போகும்  ஹார்டிக் பாண்ட்யா-  செர்பிய நடிகையுடன்    நிச்சயதார்த்தம் .

இந்திய ஆல்ரவுண்டர் ஹார்டிக் பாண்ட்யா செர்பியாவில் பிறந்த மாடல்” நடாசா ஸ்டான்கோவிக்”வுடனான  தனது நிச்சயதார்த்தத்தை 2020 ஆம் ஆண்டின் புத்தாண்டு நாளில்  அறிவித்தார். பாண்ட்யா தனது நிச்சயதார்த்தத்தை சமூக ஊடகங்களில் அறிவித்தார் .

ஒரு பதிவில், 25 வயதான இந்திய கிரிக்கெட் வீரர், “மை தேரா, து மேரி ஜானே, சாரா இந்துஸ்தான்” என்று எழுதினார். மேலும்  ஒரு செல்ஃபி ஒன்றை வெளியிட்ட பாண்ட்யா, ஒரு வீடியோவையும் பகிர்ந்துள்ளார், அதில் அவரது சகோதரர் கிருனல் பாண்ட்யா மற்றும் அவரது நண்பர்களும் இடம்பெற்றிருந்தனர்.

முன்னதாக புத்தாண்டு தினத்தன்று, பாண்ட்யா ஸ்டான்கோவிக் உடன் மற்றொரு படத்தைப் பகிர்ந்து கொண்டார், அதில் அவர் அவருடனான உறவை உறுதிப்படுத்தியதாகத் தெரிகிறது. இருவரும் நீண்ட காலமாக டேட்டிங் செய்வதாக வதந்தி பரவியது.

சினிமாவில் நடிக்க   2012 இல் இந்தியாவுக்கு வந்த  ஸ்டான்கோவிக், 2013 ஆம் ஆண்டில் பிரகாஷ் ஜாவின் சத்தியாக்கிரகா மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இருப்பினும், அவர்  இந்திய தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ பிக் பாஸில்  போட்டியாளராக இருந்த காலத்தில் பெரும் புகழ் பெற்றார்.மேலும் அவர் பல பாலிவுட் திரைப்படங்களில் சிறப்பு தோற்றங்களில் தோன்றியுள்ளார்
.
இதற்கிடையில்,  பாண்ட்யா, முதுகில் ஏற்பட்ட காயத்திலிருந்து குணமடைந்து வருகிறார்., இந்த  இந்திய ஆல்ரவுண்டர் ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபி 2017 மற்றும் 2019 உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக ஆடியுள்ளார்  . அவர் 11 டெஸ்ட், 54 ஒருநாள் மற்றும் 40 T 20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

Mai tera, Tu meri jaane, saara Hindustan. ?? 01.01.2020 ❤️ #engaged

A post shared by Hardik Pandya (@hardikpandya93) on