நட்சத்திர ஹோட்டல்களில் பார்கள் இயங்க அனுமதி!

 

நட்சத்திர ஹோட்டல்களில் பார்கள் இயங்க அனுமதி!

இந்தியாவில் கொரோனா வைரசை தடுக்க கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அந்த ஊரடங்கு தளர்வுகளுடன் தொடர்ந்து வருகிறது. இதையொட்டி மாநிலத்தில் மது விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டது. இதனால் சுமார் 5 மாதங்கள் ஹோட்டலில் செயல்பட்டுவந்த பார்கள் மூடப்பட்டிருந்தன. இதனிடையே கடந்த மே மாதம் முதல் டாஸ்மாக் கடைகள் விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இருப்பினும் ஹோட்டல் மற்றும் நட்சத்திர விடுதிகளில் செயல்பட்டுவந்த பார்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

நட்சத்திர ஹோட்டல்களில் பார்கள் இயங்க அனுமதி!

இதனால் மாநில லால்துறைக்கு ஆயிரம் கோடிக்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் தற்போது சாதாரண பார் தவிர்த்து, கிளப், ஸ்டார் ஹோட்டல், சுற்றுலா வளர்ச்சி கழக ஹோட்டல்களில் செயல்பட்டுவந்த மதுபான பார்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் மது விற்பனை இயல்புநிலைக்கு திரும்பி வருகிறது. மதுபான விடுதிகள் திறப்பை தொடர்ந்து மது விற்பனை படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மதுபான விடுதிகள், உணவகங்கள் திறக்கப்பட்டு உள்ளதால், அடுத்து வரும் நாட்களில் கலால்துறைக்கு வருவாய் மேலும் அதிகரிக்கும் என்று கர்நாடக அரசு நம்பிக்கையுடன் உள்ளது. பார்கள் திறக்கப்படும் போது சமூக இடைவெளி, குறைந்த நபர்களுக்கு மட்டுமே அனுமதி, முகக்கவசம் உள்ளிட்டவைகள் கட்டாயமாக்கப்பட உள்ளது.