“சயின்டிஸ்ட்டான என்னாலேயே மனைவிய சமாளிக்க முடியலே..” -அணு விஞ்ஞானி எடுத்த அதிர்ச்சி முடிவு.

 

“சயின்டிஸ்ட்டான என்னாலேயே மனைவிய சமாளிக்க முடியலே..” -அணு விஞ்ஞானி எடுத்த அதிர்ச்சி முடிவு.

ஒரு சயின்டிஸ்ட் தன்னுடைய மனைவியை சமாளிக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பலரை அதிர்ச்சியடைய செய்துள்ளது .

“சயின்டிஸ்ட்டான என்னாலேயே மனைவிய சமாளிக்க முடியலே..” -அணு விஞ்ஞானி எடுத்த அதிர்ச்சி முடிவு.

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் அனுஜ் திரிபாதி என்ற 37 வயதான அணு விஞ்ஞானி பாபா அணு ஆராய்ச்சி மையத்தின்  பார்கின் பயோ-கெம் துறையில் பணிபுரிந்து வந்தார் .அவர் தன்னுடைய குடும்பத்தோடு டிராம்பேயில் உள்ள  குடியிருப்பில்  வசித்து வந்தார்.அவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறது .

இந்நிலையில் அவரின் மனைவிக்கும் அவருக்கும்  அடிக்கடி குடும்ப தகராறு வருவது வழக்கம் .சாதாரண விஷயத்துக்கெல்லாம் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது .அதன்படி கடந்த வியாழக்கிழமை இருவர்களுக்குள் மீண்டும் மோதல் வெடித்தது .அந்த மோதலுக்கு காரணம் அவர்களுக்கு  இருக்கும் இரண்டு குழந்தைகளுக்கும் யார் சாப்பாடு ஊட்டுவது என்ற விஷயத்தில் சண்டை ஏற்பட்டுள்ளது .அதன் காரணமாக இருவருக்குள் அன்று இரவு முழுவதும் கடுமையான தகராறு ஏற்பட்டுள்ளது .அந்த தகராறில் மிகவும் வாழ்க்கையை வெறுத்து போன அந்த சயின்டிஸ்ட் திரிபாதி அந்த வீட்டில் இருக்கும் ஒரு மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .பிறகு அதிகாலையில் தன்னுடைய கணவனை காணாத அந்த சயின்டிஸ்ட்டின் மனைவி அவரை தேடிய போது, அவர் தன்னுடைய அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார் .அதன் பிறகு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது .அந்த சயின்டிஸ்ட் வீட்டிற்கு வந்த போலீசார் அவரின் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு அந்த வீட்டில் ஏதாவது தற்கொலை குறிப்பு இருக்கிறதா என்று தேடினார்கள் .ஆனால் அவர்களுக்கு எந்த தற்கொலை குறிப்பும் கிடைக்காததால் அவர்கள் மேற்கொண்டு அவரின் மனைவியிடம் விசாரித்து வருகிறார்கள் .

“சயின்டிஸ்ட்டான என்னாலேயே மனைவிய சமாளிக்க முடியலே..” -அணு விஞ்ஞானி எடுத்த அதிர்ச்சி முடிவு.