சிறுமிக்கு நீதி வேண்டி, முடி திருத்தும் தொழிலாளர்கள் போராட்டம்

சிறுமிக்கு நீதி வேண்டி, முடி திருத்தும் தொழிலாளர்கள் போராட்டம்

திண்டுக்கல்லில் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் விடுதலையானதை கண்டித்து தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட முடிதிருத்தும் தொழிலாளர்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டம் குறும்பட்டியை சேர்ந்த

சிறுமிக்கு நீதி வேண்டி, முடி திருத்தும் தொழிலாளர்கள் போராட்டம்

முடிதிருத்தும் தொழிலாளி வெங்கடாசலம் என்பவரது 13 வயது மகள், கடந்த 2019ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்து மின்சாரம் பாய்ச்சி கொல்லப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடையவர்களை போதிய ஆதாரங்கள் இல்லாததால் நீதிமன்றம் விடுவித்தது. இதனை கண்டித்து தஞ்சையில்

சிறுமிக்கு நீதி வேண்டி, முடி திருத்தும் தொழிலாளர்கள் போராட்டம்

போராட்டத்தில் ஈடுபட்ட சோழமண்டல முடி திருத்துவோர் நல சங்க தலைவர் பெல் மாறன், இந்த போராட்டத்தால் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும், இந்த வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து குற்றவாளிகளுக்கு மரண தண்டனை பெற்றுத்தர வேண்டும் என கேட்டுகொண்டார்