இளம் வழக்கறிஞர்கள் உதவித் தொகையை பெற வரும் திங்கள் முதல் விண்ணப்பிக்கலாம்!

 

இளம் வழக்கறிஞர்கள் உதவித் தொகையை பெற வரும் திங்கள் முதல் விண்ணப்பிக்கலாம்!

இளம் வழக்கறிஞர்கள் தமிழக அரசு அறிவித்த உதவித் தொகையை பெற வரும் திங்கட்கிழமை முதல் பார் கவுன்சில் இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இளம் வழக்கறிஞர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் அறிவித்தார். இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ், உதவித் தொகையை பெறுவதற்கான தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை குறித்து விளக்கினார். தமிழக அரசின் அரசாணையை சுட்டிக்காட்டி விளக்கிய அவர், இளம் வழக்கறிஞர்கள் அரசின் சட்டக்கல்லூரிகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் எனவும், பார் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும் எனவும் கூறினார்.

 

இளம் வழக்கறிஞர்களின் ஆண்டு வருமானம் 2 புள்ளி 5 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டுமென்றும், முப்பது வயதிற்கு உட்பட்டோருக்கு மட்டுமே உதவித் தொகை அளிக்கப்படும் என்றும் விளக்கினார்.. மேலும், பார் கவுன்சிலின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு நன்றி தெரிவித்தார்.