தமிழக ஆளுநருக்கு கூடுதல் பொறுப்பு!

 

தமிழக ஆளுநருக்கு கூடுதல் பொறுப்பு!

பஞ்சாப் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பில் பன்வாரிலால் புரோகித்தை நியமித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார்.

தமிழக ஆளுநருக்கு கூடுதல் பொறுப்பு!

இதுகுறித்து குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூடுதல் பொறுப்பாகப் பஞ்சாப் மாநில ஆளுநராகவும் செயல்படுவார் எனக் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகியாகவும் பன்வாரிலால் புரோகித் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது,

மகாராஷ்டிரா மாநிலம் விதர்பா பகுதியை சேர்ந்த பன்வாரிலால் புரோகித் 2016 ஆம் ஆண்டு அசாம் மாநில ஆளுநராக இந்திய குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து அதிலிருந்து நீக்கப்பட்ட அவர், கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டார். இவருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இவர் அரசியல் மற்றும் பொருளாதாரப் பிரிவில் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடதக்கது.