வேலை பார்த்த ஊழியர்கள் -மாஸ்க்கோடு வந்த வாலிபர்கள் -பட்டப்பகலில் பேங்கில் நடந்த விபரீதம்

 

வேலை பார்த்த ஊழியர்கள் -மாஸ்க்கோடு வந்த வாலிபர்கள் -பட்டப்பகலில் பேங்கில் நடந்த விபரீதம்

பட்டப்பகலில் ஒரு வங்கிக்குள் புகுந்த கொள்ளையர்கள் 50 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

வேலை பார்த்த ஊழியர்கள் -மாஸ்க்கோடு வந்த வாலிபர்கள் -பட்டப்பகலில் பேங்கில் நடந்த விபரீதம்

ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் அருகே சித்தோர்கர் மாவட்டத்தில் நிம்பஹேரா பகுதியில் உள்ள ஒரு ஆக்ஸிஸ் வங்கி கடந்த சனிக்கிழமை பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது .அப்போது வங்கியிலிருந்த ஊழியர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தார்கள் .வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதும் .கொடுப்பதுமாக இருந்தனர் .அப்போது திடீரென ஐந்து வாலிபர்கள் முகத்தில் மாஸ்க் அணிந்து கொண்டு ,கையில் ஒரு துப்பாக்கியை எடுத்து கொண்டு அந்த வங்கியினுள் நுழைந்தார்கள் .

பிறகு அவர்கள் வங்கி ஊழியர்களின் நெற்றி பொட்டில் துப்பாக்கியை வைத்து மிரட்டி ,வங்கியிலிருந்த வாடிக்கையாளர்கள் அனைவரையும் வெளியே போக சொன்னார்கள் .அவர்கள் மிரட்டியதை  பார்த்து பயந்து போன அவர்கள் அங்கிருந்து வெளியே ஓடி விட்டார்கள் .சிலர் அவர்களை பார்த்ததுமே ஓடி விட்டார்கள் .அதன் பிறகு அந்த கொள்ளையர்கள் அந்த வங்கியிலிருந்து 50 லட்ச ரூபாய் பணத்தை மூட்டை கட்டிக்கொண்டு ஓடி விட்டனர் .அப்போது வங்கிலியிருந்த ஊழியர் ஒருவர் துணிச்சலாக ,உயிரை துச்சமாக மதித்து அவர்களை தடுக்க முயன்றார் ,அப்போது அந்த கொள்ளையர்கள் அவரை கீழே தள்ளிவிட்டு விட்டு அங்கிருந்து ஓடி விட்டனர் .இந்த கொள்ளை பற்றி தகவலறிந்த போலீசார் அந்த வங்கியிலிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை பார்த்து அந்த கொள்ளையர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர் .இந்த கொள்ளை பற்றி அந்த வங்கி அதிகாரி  கூறுகையில் ,கொள்ளை போன பணத்தை பற்றி நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம் .சரியான தொகை எவ்வளவு என்று மதிப்பிடப்பட்டு வருகிறது .தோராயமாக 50 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கும் என்று அவர் கூறினார் .

வேலை பார்த்த ஊழியர்கள் -மாஸ்க்கோடு வந்த வாலிபர்கள் -பட்டப்பகலில் பேங்கில் நடந்த விபரீதம்