ஹைதராபாத் டாஸ் வின் – பெங்களூர் முதல் பேட்டிங்

 

ஹைதராபாத் டாஸ் வின் – பெங்களூர் முதல் பேட்டிங்

ஐபில் தொடரில் இன்று இரண்டு போட்டிகள். முதல் போட்டியில் மும்பை vs டெல்லி எனும் மோதல் நடந்தது. பெரிய அளவில் ரன் மழை பொழியும் என எதிர்பார்த்த நிலையில் டெல்லி 110 ரன்களே முதலில் ஆடி எடுத்தது. அதை 14.2 ஓவர்களிலேயே மும்பை அடித்து வெற்றி பெற்று விட்டது.

ஹைதராபாத் டாஸ் வின் – பெங்களூர் முதல் பேட்டிங்

இன்றைய இரண்டாம் போட்டியில் மோதுவது ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள். 12 போட்டிகளில் ஆடி, 7-ல் வென்று பாயிண்ட் டேபிளில் இரண்டாம் இடத்தில்  உள்ளது பெங்களூர் டீம். ஆனால்,  ஹைதராபாத் டீம், 12-ல் ஆடி 5-ல் மட்டுமே வென்று 7-ம் இடத்தில் உள்ளது.

ஹைதராபாத் டாஸ் வின் – பெங்களூர் முதல் பேட்டிங்

இன்று டெல்லி தோற்றதும் கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்கக்கூடும் பெங்களூர் ஆனாலும் இன்று பெங்களூர் வென்றால் பிளே ஆஃப் சுற்றுச்செல்லும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். அதனால், நிச்சயம் வெற்றிக்கான முனைப்பில் ஆடும். அந்த அணியில் படிக்கல், கோலி, டிவில்லியர்ஸ் என அசத்தலான வீரர்கள் இருக்கிறார்கள்.

ஹைதராபாத் டாஸ் வின் – பெங்களூர் முதல் பேட்டிங்

இன்றைய போட்டியிலும் அடுத்த போட்டியிலும் வென்றால் மட்டுமே பிளே ஆஃப் செல்வதை ஹைதராபாத் அணி நினைத்தே பார்க்க முடியும். அதனால் வாழ்வா சாவா என்று போராட்டத்தையே அது நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். எனவே, பெங்களூர் அணி வீரர்கள் பேட்டிங் செய்ய ஆயத்தமாகி வருகிறார்கள்.