பெங்களூர் vs ஹைதராபாத் – வெளியேற போவது யார்? #IPL

 

பெங்களூர் vs ஹைதராபாத் – வெளியேற போவது யார்? #IPL

ஐபிஎல் திருவிழாவில் பலரும் கணித்ததைப் போலவே இறுதிப் போட்டிக்கு மும்பை இண்டியன்ஸ் தகுதி பெற்றுவிட்டது. நேற்றைய போட்டியில் டெல்லியின் பந்துவீச்சாளர்களைப் பதம் பார்த்தனர் மும்பை இண்டியன்ஸ் வீரர்கள். ஹர்திக் பாண்டியா அந்த ஐந்து சிக்ஸர்கள் அணியின் ஸ்கோரை டபுள் செஞ்சுரிக்கு அழைத்துச் சென்றன. டெல்லி அணி 143 ரன்களில் சுருண்டது.

பெங்களூர் vs ஹைதராபாத் – வெளியேற போவது யார்? #IPL

இன்று ஓர் அணியை வெளியேற்றும் போட்டி. மோதிக்கொள்ளும் அணிகள், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.

இரு அணிகளில் ஏற்கெனவே ஒரு முறை ஹைதராபாத் அணி ஐபிஎல் சாம்பியனாகி உள்ளது. ஆனால், பெங்களூர் இதுவரை ஐபிஎல் கோப்பையை வென்றதே இல்லை. இன்னும் சொல்லப்போனால் கடந்த சில ஆண்டுகளாக பிளே ஆஃப் சுற்றுக்குக்கூட முன்னேற முடியவில்லை.

பெங்களூர் vs ஹைதராபாத் – வெளியேற போவது யார்? #IPL

இந்த ஆண்டில் தொடக்கம் முதலே சிறப்பாக ஆடி வந்த பெங்களூர் அணி, கடந்த சில போட்டிகளில் சொதப்பியதால் பாயிண்ட் டேபிளில் நான்காம் இடத்தையே பிடிக்க முடிந்தது. ஆனால், ஹைதராபாத் அணி புது உத்வேகத்துடன் சமீப மேட்ச்களில் ஆடி வருகிறது. கடைசி மூன்று போட்டிகளில் வரிசையாக வென்றிருக்கிறது ஹைதராபாத். அவற்றில் ஒரு மேட்ச் பெங்களூருவுடன் ஆடியது.

பெங்களூர் vs ஹைதராபாத் – வெளியேற போவது யார்? #IPL

ஐபிஎல் கோப்பையை வெல்லும் கனவு விராட் கோலிக்கு எப்போதும் உண்டு. அந்தக் கனவு நனவாக வேண்டும் எனில், இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணியைத் தோற்கடித்து வெளியேற்ற வேண்டும். பெங்களூர் அணியில் பேட்டிங், பவுலிங் இரண்டுமே பலமாக இருப்பதால் அது சாத்தியமும்கூட. ஆனால், டாஸ் வெல்வது போட்டியின் முடிவை தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.