சூப்பர் ஓவரில் வெற்றி பெற்ற இரு அணிகள் பெங்களூர் Vs டெல்லி – வெல்லப்போவது யார்?

சூப்பர் ஓவரில் வெற்றி பெற்ற இரு அணிகள் பெங்களூர் Vs டெல்லி – வெல்லப்போவது யார்?

நேற்றைய போட்டியில் சென்னையின் அசத்தலான வெற்றியைப் பெற்றதும், தமிழக ரசிகர்களும் உற்சாமாக அடுத்த போட்டியைக் காண தயாராகி வருகின்றனர்.

இன்றைக்கு மோதிக்கொள்ளப்போவது ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர் Vs டெல்லி கேப்பிடல்ஸ்.

சூப்பர் ஓவரில் வெற்றி பெற்ற இரு அணிகள் பெங்களூர் Vs டெல்லி – வெல்லப்போவது யார்?

எந்த ஐபிஎல் தொடரிலும் குறிப்பிடத்தகுந்த வெற்றியை பெங்களூர் அணி பெற்றதில்லை. ஆனால், இந்தத் தொடரில் அதிரடியாக ஆடி வெற்றி மேல் வெற்றி குவித்து வருகிறது.

முதல் போட்டியிலேயே ஹைதராபாத் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அடுத்த போட்டியில் பஞ்சாப்பிடம் 97 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. அவ்வளவுதான் பெங்களூர் தோற்கும் ஃபார்ம்க்குத் திரும்பி விட்டது என்று கமெண்ட் செய்யப்பட்டது. ஆனால், மூன்றாம் போட்டியில் பலம் வாய்ந்த மும்பை இண்டியன்ஸ் அணியை சூப்பர் ஓவருக்கு அழைத்து வந்து தோற்கடித்தது. அதேபோல ராஜஸ்தான் அணியுடான போட்டியில் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வென்று, இந்த ஐபிஎல் தொடரில் நாங்க வேற மாதிரி எனக் காட்டியது.

சூப்பர் ஓவரில் வெற்றி பெற்ற இரு அணிகள் பெங்களூர் Vs டெல்லி – வெல்லப்போவது யார்?

அறிமுக வீரர் தேவ்தத் படிக்கல், ஆரோன் பின்ச், டி வில்லியர்ஸ் ஆகிய பேட்ஸ்மேன்கள் அதிரடி காட்டி வருகிறார்கள். விராட் கோலி ஃபார்மில் இல்லை என்ற குற்றச்சாட்டுக்கு ராஜஸ்தான் போட்டியில் 72 ரன்கள் விளாசி பதில் சொல்லிவிட்டார். பின் வரிசையில் ஷிவம் டூபேவும் அடுத்து ஆடுகிறார்.

சூப்பர் ஓவரில் வெற்றி பெற்ற இரு அணிகள் பெங்களூர் Vs டெல்லி – வெல்லப்போவது யார்?

பெங்களூர் பவுலிங்கைப் பொறுத்தவரை வாஷிங்டன் சுந்தர் விக்கெட்டுகள் அதிகம் எடுக்கா விட்டாலும் ரன்களைக் கட்டுப்படுத்துகிறார். சைனி வீசிய சூப்பர் ஓவர் மும்பையையே வெல்ல வைத்தது.

சூப்பர் ஓவரில் வெற்றி பெற்ற இரு அணிகள் பெங்களூர் Vs டெல்லி – வெல்லப்போவது யார்?

சஹலின் மேஜிக் பந்து வீச்சு எதிரணிக்கு அச்சத்தைக் கொடுக்கக்கூடியது. ஷிவம் டூபே, உடானா ஆகியோரும் நன்றாக வீசி வருகிறார்கள்.

அப்படியே டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு வரும். ஐபிஎல் போட்டிகள் அனைத்திலும் வெல்வேன் என்றார் ஸ்ரேயஸ் ஐயர். அது முடியாவிட்டாலும் கடைசி வரை நம்பிக்கையோடு டீமை வழிநடத்திச் செல்கிறார்.

சூப்பர் ஓவரில் வெற்றி பெற்ற இரு அணிகள் பெங்களூர் Vs டெல்லி – வெல்லப்போவது யார்?

டெல்லியும் சூப்பர் ஓவரில் வெற்றியை ருசித்த அணிதான். முதல் போட்டியில் பஞ்சாப் அணியை சூப்பர் ஓவரில் வென்றது. அடுத்த போட்டியில் சென்னையை மிக எளிதாக 44 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. ஹைதராபாத் அணியோடு மட்டும் இதன் வெற்றிப் பயணம் சறுக்கியது.

நான்காம் போட்டியில் வலிமை வாய்ந்த கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. எந்த அணியோடு பயப்படாமல் சண்டை செய்வதில் முன்னணி நிற்கிறது டெல்லி.

சூப்பர் ஓவரில் வெற்றி பெற்ற இரு அணிகள் பெங்களூர் Vs டெல்லி – வெல்லப்போவது யார்?

டெல்லி பேட்டிங்கைப் பொறுத்தவரை ப்ரிதிவ் ஷா நல்ல ஃபார்மில் இருக்கிறார். கேப்டன் ஸ்ரேயஸ் நிதானமாகவும் தேவைப்பட்டால் அதிரடியாகவும் ஆடுகிறார். ரிஷப் பந்த், தவான் ஆகியோர் நன்றாக ஆடி வருகிறார்கள். கொல்கத்தாவுக்கு எதிராக 228 எனும் மாபெரும் ஸ்கோரை நிறுத்திய டீம் இது.

சூப்பர் ஓவரில் வெற்றி பெற்ற இரு அணிகள் பெங்களூர் Vs டெல்லி – வெல்லப்போவது யார்?

அதேபோல பவுலிங்கில் ரபாடா, அஸ்வின், மார்க்கஸ் ஸ்டெயினிஸ், அமித் மிஸ்ரா என ஃபாஸ்ட் மற்றும் ஸ்பின் பந்து வீச்சுக்கு ஆட்கள் ரெடியாக இருக்கிறார்க. ரபாடா மற்றும் ஸ்டெயினிஸ் சில நேரம் ரன்களை வாரி வழங்கி விடுகின்றனர். அதைத்தான் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம்.

சூப்பர் ஓவரில் வெற்றி பெற்ற இரு அணிகள் பெங்களூர் Vs டெல்லி – வெல்லப்போவது யார்?

இரு அணிகளுமே ஒன்றுக்கொன்று சளைத்தது இல்லை. இரண்டுக்குமே வெற்றிக்கான சம வாய்ப்பு இருக்கவே செய்கிறது. டாஸ் விண் பண்ணி, முதலில் பேட்டிங் ஆடி, 200 யைக் கடந்த ஸ்கோர் அடுத்தி விட்டால் இரண்டாம் பேட்டிங் பிடிக்கும் அணிக்கு வெற்றி வாய்ப்பு சற்று குறைவு. ஒருவேளை டாஸ் வின் பண்ணுவதே டீம் வெற்றியையும் முடிவு செய்தாலும் செய்யலாம்.