பஜாஜ் கன்ஸ்யூமர் கேர் லாபம் 2 மடங்கு அதிகரிப்பு.. இறுதி டிவிடெண்ட் ரூ.4 வழங்க பரிந்துரை

பஜாஜ் கன்ஸ்யூமர் கேர் லாபம் 2 மடங்கு அதிகரிப்பு.. இறுதி டிவிடெண்ட் ரூ.4 வழங்க பரிந்துரை

பஜாஜ் கன்ஸ்யூமர் கேர் நிறுவனம் 2021 மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.54.67 கோடி ஈட்டியுள்ளது.

பஜாஜ் குழுமத்தை சேர்ந்த நுகர்பொருள் நிறுவனமான பஜாஜ் கன்ஸ்யூமர் கேர் தனது கடந்த மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. பஜாஜ் கன்ஸ்யூமர் கேர் நிறுவனம் 2021 மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.54.67 கோடி ஈட்டியுள்ளது. இது 2020 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 2 மடங்குக்கு மேல் அதிகமாகும். அந்த காலாண்டில் இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.23.29 கோடி மட்டுமே ஈட்டியிருந்தது.

பஜாஜ் கன்ஸ்யூமர் கேர் லாபம் 2 மடங்கு அதிகரிப்பு.. இறுதி டிவிடெண்ட் ரூ.4 வழங்க பரிந்துரை
பஜாஜ் கன்ஸ்யூமர் கேர்

2021 மார்ச் காலாண்டில் பஜாஜ் கன்ஸ்யூமர் கேர் நிறுவனத்தின் பொருட்களின் விற்பனை வாயிலான வருவாய் ரூ.244.86 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டில் ரூ.172 கோடியாக இருந்தது. 2021 மார்ச் காலாண்டில் பஜாஜ் கன்ஸ்யூமர் கேர் நிறுவனத்தின் மொத்த செலவினம் ரூ.189.17 கோடியாக உயர்ந்துள்ளது.

பஜாஜ் கன்ஸ்யூமர் கேர் லாபம் 2 மடங்கு அதிகரிப்பு.. இறுதி டிவிடெண்ட் ரூ.4 வழங்க பரிந்துரை
பஜாஜ் கன்ஸ்யூமர் கேர்

பஜாஜ் கன்ஸ்யூமர் கேர் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு, நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு ரூ.1 முகமதிப்பு கொண்ட ஒரு பங்கு ஒன்றுக்கு ரூ.4 இறுதி டிவிடெண்டாக பரிந்துரை செய்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று பங்கு வர்த்தகம் முடிவடைந்த போது பஜாஜ் கன்ஸ்யூமர் கேர் நிறுவன பங்கின் விலை முந்தைய நாளை காட்டிலும் 5.69 சதவீதம் குறைந்து ரூ.293.50ஆக சரிவடைந்தது.