லாக்டவுனில் 1.27 லட்சம் வாகனங்களை விற்பனை செய்த பஜாஜ்…

 

லாக்டவுனில் 1.27 லட்சம் வாகனங்களை விற்பனை செய்த பஜாஜ்…

நாட்டின் முன்னணி இரு மற்றும் வர்த்தக வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ் ஆட்டோ கடந்த மே மாதத்தில் மொத்தம் 1.27 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே மாதத்தைக் காட்டிலும் 70 சதவீதம் குறைவாகும். 2019 மே மாதத்தில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் மொத்தம் 4.19 லட்சம் வாகனங்களை விற்பனை செய்து இருந்தது. லாக்டவுன் காரணமாகத்தான் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் வாகன விற்பனை கடும் சரிவை சந்தித்துள்ளது.

லாக்டவுனில் 1.27 லட்சம் வாகனங்களை விற்பனை செய்த பஜாஜ்…

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கடந்த மே மாதத்தில் உள்நாட்டில் மொத்தம் 40,074 வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்து இருந்தது. இது சென்ற ஆண்டின் இதே மாதத்தைக் காட்டிலும் 83 சதவீதம் குறைவாகும். அந்நிறுவனம் கடந்த மாதத்தில் மொத்தம் 87,054 வாகனங்களை ஏற்றுமதிசெய்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே மாதத்தைக் காட்டிலும் 53 சதவீதம் குறைவாகும். 2019 மே மாதத்தில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் மொத்தம் 1.83 லட்சம் வாகனங்களை ஏற்றுமதி செய்து இருந்தது.

லாக்டவுனில் 1.27 லட்சம் வாகனங்களை விற்பனை செய்த பஜாஜ்…

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் கடந்த மாதம் மொத்தம் 1.12 லட்சம் இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதில் உள்நாட்டில் 39,286 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. வர்த்தக வாகனங்களை பொறுத்தவரை அந்நிறுவனம் கடந்த மாதம் மொத்தம் 14,330 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதில் உள்நாட்டில் 788 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.