விற்பனையில் சரிவு.. வருவாய் வீழ்ச்சி.. பஜாஜ் ஆட்டோ லாபம் ரூ.1,138 கோடியாக குறைந்தது…

விற்பனையில் சரிவு.. வருவாய் வீழ்ச்சி.. பஜாஜ் ஆட்டோ லாபம் ரூ.1,138 கோடியாக குறைந்தது…

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 2020 செப்டம்பர் காலாண்டில் தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.1,138.2 கோடி ஈட்டியுள்ளது.

நாட்டின் முன்னணி இரு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் தயாரிப்பு நிறுவனமான பஜாஜ் ஆட்டோ தனது செப்டம்பர் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 2020 செப்டம்பர் காலாண்டில் தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.1,138.2 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 18.8 சதவீதம் குறைவாகும்.

விற்பனையில் சரிவு.. வருவாய் வீழ்ச்சி.. பஜாஜ் ஆட்டோ லாபம் ரூ.1,138 கோடியாக குறைந்தது…
பஜாஜ் ஆட்டோ

2020 செப்டம்பர் காலாண்டில் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் ரூ.7,156 கோடி ஈட்டியுள்ளது. இது 2019 செப்டம்பர் காலாண்டைக் காட்டிலும் 7.2 சதவீதம் குறைவாகும். கடந்த செப்டம்பர் 30ம் தேதி நிலவரப்படி, இந்நிறுவனத்திடம் உள்ள உபரி ரொக்கம் மற்றும் ரொக்கத்துக்கு சமமான தொகை சுமார் ரூ.16,240 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஜூன் இறுதியில் இது ரூ.14,232 கோடியாக இருந்தது.

விற்பனையில் சரிவு.. வருவாய் வீழ்ச்சி.. பஜாஜ் ஆட்டோ லாபம் ரூ.1,138 கோடியாக குறைந்தது…
பஜாஜ் ஆட்டோ ஆலை

கடந்த செப்டம்பர் காலாண்டில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் மொத்தம் 10.53 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 7.2 சதவீதம் குறைவாகும். உள்நாட்டில் இரு சக்கர வாகனங்கள் விற்பனை 6 சதவீதமும், வர்த்தக வாகனங்கள் விற்பனை 78 சதவீதமும் குறைந்துள்ளது. அதேவேளையில் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் ஏற்றுமதி 12 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.