2ஆவதும் பெண் குழந்தை! வருத்தத்தில் குழந்தையை கொன்றுவிட்டு தாயும் தற்கொலை…

இரண்டாவதும் பெண் குழந்தை பிறந்த வருத்தத்தில் 3 மாத குழந்தையை கொலை செய்து விட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஈரோட்டில் நிகழ்ந்துள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த மூங்கில்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மனைவி சங்கீதா. குணசேகரன் கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆன நிலையில் 9 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இரண்டாவதாக இவர்கள் ஆண் குழந்தையை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் மீண்டும் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் மனமுடைந்த குணசேகரனின் மனைவி சங்கீதா தனக்கு பிறந்த பெண் குழந்தையை வீட்டிலுள்ள அண்டா தண்ணீரில் மூழ்கி கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ பகுதிக்கு சென்ற பெருந்துறை காவல்துறையினர் இரு சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சங்கீதாவின் உயிரிழப்பிற்கு இது தான் காரணமா அல்லது வேறேதும் பிரச்சனையா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெற்ற தாயே தனது பெண் குழந்தையை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Most Popular

தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு முன்னணி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அழைப்பு!

தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு முன்னணி லாஜிஸ்டிக் மற்றும் பெட்ரோ கெமிக்கல் உள்ளிட்ட முன்னனி 5 நிறுவனங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக, லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களான (FedEX) பெடக்ஸ், யு.பி.எஸ்...

சீனாவுக்கு படையெடுத்த வெட்டுக்கிளி!

பாகிஸ்தான், இந்தியா உள்ளிட்ட நாடுகளை மிரட்டிய வெட்டுக்கிளிகள் சீனாவில் நுழைந்துள்ளன. கொரானாவால் நாட்டின் நிதி நிலைமை கெட்டது என்றால்,சமீபத்தில் படையடுத்து வரும் வெட்டுக்கிளிகளால் எதிர்காலத்தில் உணவுப்பஞ்சம் ஏற்படுமோ என்று அச்சம் உருவாகியுள்ளது. இந்தியாவில் வடமாநிலங்களுக்குள்...

கொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 63.02% ஆக உயர்வு- மத்திய சுகாதாரத்துறை

இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 8,78, 254 லிருந்து 9,04,225 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 5,69, 753 பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23,711 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார...

கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

இந்துக்களின் கடவுளர்கள் மற்றும் புராணங்கள் தொடர்பாக பல்வேறு வீடியோக்களை கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சானல் வெளியிட்டு வருகிறது. அதனால், அந்த யூடியூப் சேனலை தடை செய்யவேண்டும் என்றும், சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய...
Open

ttn

Close