பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு; எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு; எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

பாபர் மசூதி இடிப்புக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி எஸ்டிபிஐ கட்சியினர் ஈரோட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு; எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பாஜக மூத்த தலைவர்கள், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட 32 பேருக்கு எதிரான வழக்கில் நேற்று சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. சுமார் 28 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருந்த நிலையில், குற்றத்தை உரிய ஆதாரங்களுடன் சிபிஐ நிரூபிக்கவிலை என்பதால் 32 பேரையும் விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது.

பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு; எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

இந்த நிலையில் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை கைது செய்யக்கோரி எஸ்டிபிஐ கட்சி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரோடு காந்தி சிலை அருகே நடந்த அந்த ஆர்ப்பாட்டத்தில், ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு; எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

அப்போது, 400 ஆண்டுகள் பழமையான பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி, முரளி மனோகர் உள்ளிட்டோரை கைது செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.