B for பிராந்தி ,V for விஸ்கி என்று வகுப்பறையை Bar ஆக மாற்றிய ஆசிரியர்கள்- குடித்துவிட்டு கும்மாளமடிக்கும் வீடியோ வைரல்…

B for பிராந்தி ,V for விஸ்கி என்று வகுப்பறையை Bar ஆக மாற்றிய ஆசிரியர்கள்- குடித்துவிட்டு கும்மாளமடிக்கும் வீடியோ வைரல்…

பாட்னா, டிசம்பர் 26: ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில், பீகாரில் உள்ள ஒரு பள்ளியின் மூன்று ஆசிரியர்கள் ஒரு வகுப்பறைக்குள் மது அருந்திய காட்சி  கேமராவில் சிக்கியுள்ளது . இந்த சம்பவம் பீகார் கிழக்கு சம்பரன் மாவட்டத்தில் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. , அரசுப் பள்ளியின் ஆசிரியர்கள் மூன்று பேர் வீடியோவில்  ஒரு வகுப்பறைக்குள் குடிப்பதைக் காண முடிந்தது.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, மதுபனில் உள்ள சரேய நவீன்  நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்தது என்று தெரியவந்துள்ளது . இந்த வீடியோ சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு பதிவாகியுள்ளது , இருப்பினும், இது சமூக ஊடகங்களில் பலமுறை பகிரப்பட்ட பின்னர் இந்த செயல் வெளிச்சத்திற்கு வந்தது  தெரியவந்துள்ளது . இந்த சம்பவம் நடந்த பிஹார் மாநிலத்தில்  மதுபானம் விற்பனை மற்றும் நுகர்வு நிதீஷ்குமார் அரசாங்கத்தால் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. 

 வீடியோ கிளிப்பில் உள்ள மூன்று பேரும் ஒரு வகுப்பறைக்குள் குடித்துவிட்டு விருந்து சாப்பிடுகிறாரகள் . மூன்று ஆசிரியர்களும் கஜேந்திர பைதா, சத்யேந்திர சவுத்ரி மற்றும் அபய் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சில கிராமவாசிகள் , வகுப்பறையின் ஜன்னலிலிருந்து வீடியோவை  படமாக்கினர்  என்று ஒரு உள்ளூர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வைரல் வீடியோவின் நம்பகத்தன்மையை நிரூபிக்க விசாரணை தொடங்கப்படும் என்றும் அதற்கேற்ப தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மதுபனின்  கல்வி அதிகாரி (பி.இ.ஓ) உமேஷ் குமார் சிங்  அறிக்கையில் கூறியுள்ளார்