பி.எட்., படிப்புகளில் சேரணுமா? – முக்கிய அறிவிப்பு இதோ!!

 

பி.எட்., படிப்புகளில் சேரணுமா? – முக்கிய அறிவிப்பு இதோ!!

கல்வியியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை குறித்து கல்லூரிக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

பி.எட்., படிப்புகளில் சேரணுமா? – முக்கிய அறிவிப்பு இதோ!!

தமிழகத்தில் உள்ள ஏழு அரசு கல்வியியல் மற்றும் 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை கல்வியியல் பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இணையதளம் வழியாக நேற்று முதல் 22ஆம் தேதி வரை என்ற https://www.tngasaedu.in/ இணையதள முகவரியில் பதிவு செய்யலாம். இணையதளம் வழியாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் கல்வியியல் கல்லூரி உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பி.எட்., படிப்புகளில் சேரணுமா? – முக்கிய அறிவிப்பு இதோ!!

விண்ணப்பம் பதிவு செய்ய விண்ணப்பக் கட்டணமாக ரூபாய் 500 செலுத்தப்பட வேண்டும். எஸ்சி /எஸ்டி விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணம் 250 ரூபாய் செலுத்தினால் போதுமானது. விண்ணப்பிக்கும்போது வரிசைப்படி கல்லூரிகளை தேர்வு செய்தல் வேண்டும் .இது தொடர்பான கூடுதல் விபரங்கள் மற்றும் எந்தெந்த கல்லூரிகளில் என்னென்ன பாடப்பிரிவுகள் ,மாணவர் சேர்க்கை விபரங்கள் உள்ளன என்பது இணையதள முகவரிகளில் கொடுக்கப்பட்டுள்ளது. இணையதளத்தில் பதிவு செய்வதில் ஏதேனும் சிரமம் இருந்தால் மாணவர்கள் 044 2827 1911 என்ற எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொண்டு கூடுதல் விவரம் மற்றும் வழிகாட்டுதல் பெறலாம்.

பி.எட்., படிப்புகளில் சேரணுமா? – முக்கிய அறிவிப்பு இதோ!!

விண்ணப்ப கட்டணம் மற்றும் பதிவு கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் டெபிட் கார்டு/ கிரெடிட் கார்டு /நெட்பேங்கிங் மூலம் இணையதள வசதியாக செலுத்தலாம். இணையதள வாயிலாக கட்டணம் செலுத்தாத மாணவர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில் the director directorate of collegiate education Chennai 6 என்ற பெயரில் வங்கி வரைவோலை அல்லது நேரடியாகவும் செலுத்தலாம் ” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.