2018 -19 ஆம் கல்வியாண்டில் பி.எட். சேர்ந்த மாணவர்களின் சேர்க்கை ரத்து!

 

2018 -19 ஆம் கல்வியாண்டில் பி.எட். சேர்ந்த மாணவர்களின் சேர்க்கை ரத்து!

கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் 16 முதல் நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அதனால் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வழக்கமாக ஜூன் மாதத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும். ஆனால் கொரோனா ஊரடங்கால் கடைசி கல்வியாண்டே இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பது குறித்து ஜூலை மாதம் முடிவு செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

2018 -19 ஆம் கல்வியாண்டில் பி.எட். சேர்ந்த மாணவர்களின் சேர்க்கை ரத்து!

இந்நிலையில் 2018 -19 ஆம் கல்வியாண்டில் பி.எட். சேர்ந்த மாணவர்களின் சேர்க்கை ரத்து செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யு.ஜி.சி. அனுமதி தராததால் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் இத்தகைய அறிவைப்பை வெளியிட்டுள்ளது. மேலும் பி.எட். சேர்ந்த மாணவர்களின் கல்விக் கட்டணம் திருப்பித் தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் சார்பில் பி.எட் பட்டப்படிப்பு நடத்தப்பட்டு வருகிறது. பி.எட் பட்டப்படிப்பு ஓராண்டு படிப்பாக இருந்தவரை, தேசிய ஆசிரியர் பயிற்சி நிறுவனம் இதற்கான அங்கீகாரத்தை வழங்கி வந்தது. தற்போது பி.எட் படிப்பு 2 ஆண்டு படிப்பாக மாற்றப்பட்டுள்ளதால் அதற்கான அங்கீகாரத்தை யு.ஜி.சி வழங்குகிறது.