நவீன உலகின் கர்ணன்…. இதுவரை அறக்கட்டளைக்கு ரூ.1.45 லட்சம் கோடி.. அள்ளி கொடுத்த அசிம் பிரேம்ஜி…

 

நவீன உலகின் கர்ணன்…. இதுவரை அறக்கட்டளைக்கு ரூ.1.45 லட்சம் கோடி.. அள்ளி கொடுத்த அசிம் பிரேம்ஜி…

விப்ரோ நிறுவனத்தின் நிறுவனர் அசிம் பிரேம்ஜி இதுவரை அறக்கட்டளைக்கு நன்கொடையாக ரூ.1.45 லட்சம் கோடி கொடுத்துள்ளார். இன்னும் கொடுத்து கொண்டு இருக்கிறார்.

இந்தியா மெகா கோடீஸ்வரர்களில் ஒருவர் 75 வயதான அசிம் பிரேம்ஜி. உலகளவில் நல்லது செய்யும் மெகா கோடீஸ்வரர்கள் பில்கேட்ஸ், ஜார்ஜ் சொரெஸ் மற்றும் வாரன் பபெட் ஆகியோர் பட்டியலில் கணக்கிடப்பட வேண்டிய ஒரே இந்திய கோடீஸ்வரர் யார் என்றால் அது அசிம் பிரேம்ஜி. அறக்கட்டளை பணிகளுக்காக அவர் பணத்தை அள்ளி கொடுக்கிறார். போர்ப்ஸின் இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் அசிம் பிரேம்ஜி சுமார் ரூ.53 ஆயிரம் கோடி சொத்து மதிப்புடன் 17வது இடத்தில் உள்ளார்.

நவீன உலகின் கர்ணன்…. இதுவரை அறக்கட்டளைக்கு ரூ.1.45 லட்சம் கோடி.. அள்ளி கொடுத்த அசிம் பிரேம்ஜி…
அசிம் பிரேம்ஜி

2019ம் ஆண்டில் அசிம் பிரேம்ஜி கடைசியாக தனது அசிம் பிரேம்ஜி அறக்கட்டளைக்கு எழுதி வைத்த சொத்துக்கு பிறகு அந்த அறக்கட்டளை உலகின் டாப் 5 தனியார் அறக்கட்டளைகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. மேலும் ஆசியாவில் மிகப்பெரிய அறக்கட்டளையானது. கடந்த ஆண்டு மார்ச்சில் ரூ.52,750 கோடி ரூபாய் மதிப்புள்ள விப்ரோவின் 34 சதவீத பங்குகளிலிருந்து கிடைக்கும் வருவாய் அனைத்தையும் அவரது தொண்டு நிறுவனத்தை ஆதரிக்கும் ஒரு நன்கொடை நிதியில் சேர்க்கப்படும் என அறிவித்தார்.

நவீன உலகின் கர்ணன்…. இதுவரை அறக்கட்டளைக்கு ரூ.1.45 லட்சம் கோடி.. அள்ளி கொடுத்த அசிம் பிரேம்ஜி…
அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை

இந்தியாவின் அரிய தொழில்முனைவோர்களில் ஒருவரான அசிம் பிரேம்ஜி கொடுக்கும் சந்தர்ப்பை தவறவிடுவதில்லை. இதுவரை அவர் அறக்கட்டளை வாயிலாக ரூ.1.45 லட்சம் கோடி செலவிட்டார். இன்னும் ஏராளமான நற்பணிகளுக்கு நன்கொடை அளித்து கொண்டுதான் இருக்கிறார். அண்மையில் கோவிட்-19 தொற்றுநோய் நிவாரண பணிகளுக்காக தனது அறக்கட்டளை மூலம் ரூ.1,000 கோடி செலவிட்டார். காசு சேர்க்க வேண்டும் என்பதை விட புண்ணியத்தை சேர்க்க வேண்டும் எண்ணம்தான் அசிம் பிரேம்ஜியிடம் காணப்படுகிறது.