அப்ளை பண்ணவுடன் ஆட்டோமேட்டிக்-ஆ இபாஸ் கிடைக்கும்: சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல்

 

அப்ளை பண்ணவுடன் ஆட்டோமேட்டிக்-ஆ இபாஸ் கிடைக்கும்: சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததால், இபாஸ் முறை தொடரும் என அரசு அறிவித்தது. அதனை நீக்க வேண்டும் என பல தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தும், மக்களின் நலன் கருதி அதனை தகர்க்க முடியாது என முதல்வர் பழனிசாமி தெரிவித்து விட்டார். ஆனால், அத்தியாவசிய காரணங்களுக்கு கூட இபாஸ் கிடைக்கவில்லை என தொடர்ந்து புகார் எழுந்து வந்தது. இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர், இபாஸ் முறையில் தளர்வுகள் அளிப்பதாக முதல்வர் அறிவித்தார். அதாவது, விண்ணப்பித்த எல்லாருக்குமே உடனடியாக பாஸ் கிடைக்கும் என்றும் ஆதார் எண், ரேஷன் கார்டு உள்ளிட்ட சான்று இருந்தால் போதும் என்றும் தெரிவித்தார்.

அப்ளை பண்ணவுடன் ஆட்டோமேட்டிக்-ஆ இபாஸ் கிடைக்கும்: சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல்

அதன் படி முதல்வர் அறிவித்த இபாஸ் தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வந்திருக்கிறது. அதனால் சொந்த இடங்களுக்கு திரும்ப முடியாமல் தவித்து வந்த பலர், ஊர் திரும்பி வருகின்றனர். இந்த நிலையில், அப்ளை செய்தவுடன் ஆட்டோமேட்டிக் ஆக இபாஸ் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும், தகுந்த காரணங்களுக்காக மட்டுமே கோரி விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.