போலீசாரால் ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை… மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

 

போலீசாரால் ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை… மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

சந்தேகத்தின் பேரில், விசாரணைக்கு வரும்படி காவல் துறையினர் அழைத்ததால், உடைந்த பாட்டிலால், கழுத்தை அறுத்து ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக அறிக்கை அளிக்க சென்னை மாநகர காவல் ஆணையருக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

போலீசாரால் ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை… மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

சென்னை, அயப்பாக்கத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் பாக்கியராஜ், தனது ஆட்டோவில், நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அங்கு ரோந்து வந்த திருமுல்லைவாயல் ஏட்டு சந்தோஷ், அவர்களிடம் விசாரித்துள்ளார். அப்போது டிரைவிரிடம் இருந்த மொபைல்போன்களை பறித்த போலீசார், காவல் நிலையத்துக்கு வரும்படி அழைத்துள்ளார்.

இதற்கு மறுத்த பாக்கியராஜ், அங்கு கிடந்த உடைந்த பீர் பாட்டிலால் கழுத்தை அறுத்துக் கொண்டார். படுகாயமடைந்த பாக்கியராஜை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, வழியிலேயே அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதுசம்பந்தமாக பாக்கியராஜின் நண்பர் பிரதீப் அளித்த புகாரின் அடிப்படையில், திருமுல்லைவாயல் காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன் தாஸ், இதுசம்பந்தமாக இரண்டு வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்டார்.