‘போலீஸ் ஸ்டேஷனில் தீக்குளித்த ஆட்டோ டிரைவர் ‘: விசாரணைக்கு அழைத்ததால் எடுத்த விபரீத முடிவு!

 

‘போலீஸ் ஸ்டேஷனில் தீக்குளித்த ஆட்டோ டிரைவர் ‘: விசாரணைக்கு அழைத்ததால் எடுத்த விபரீத முடிவு!

கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் சவுக்கத் அலி (32). இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் இருக்கின்றனர். நேற்று வழக்கம் போல சவுக்கத் அலி ஆட்டோ ஓட்ட சென்ற நிலையில், அங்கு சதீஷ் என்பவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. அதனைக் கண்ட போலீசார், அவர்களை காவல் நிலையத்திற்கு வரச்சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.

‘போலீஸ் ஸ்டேஷனில் தீக்குளித்த ஆட்டோ டிரைவர் ‘: விசாரணைக்கு அழைத்ததால் எடுத்த விபரீத முடிவு!

பின்னர் மாலை 4 மணிக்கு சதீஷும் சவுக்கத் அலியும் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளனர். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் விதமாக சண்டை போட்டுக் கொண்டதால் அவர்கள் மீது சாதாரண வழக்குப்பதிந்து அனுப்பி வைத்துள்ளனர். அதோடு, சவுக்கத் அலி மதுபோதையில் இருந்ததால் ஆட்டோவை காலை வந்து அபராதத்தை செலுத்திவிட்டு எடுத்துச் செல்லுமாறு போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து மாலை 6 மணிக்கு கையில் பெட்ரோல் கேனுடன் வந்த சவுக்கத் அலி, காவல் நிலையம் வாசலிலேயே தீக்குளித்துள்ளார். இதனால் பதற்றம் அடைந்த போலீசார் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். குடிபோதையில் இருந்த சவுக்கத் அலி, சிகிச்சைக்கு ஒத்துழைப்பு வழங்காததால் அங்கிருந்து கோவையில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.