வாட்டிய வறுமை : தூக்கில் தொங்கிய ஆட்டோ டிரைவர்!

 

வாட்டிய வறுமை : தூக்கில் தொங்கிய ஆட்டோ டிரைவர்!

கொரோனா அச்சம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வறுமையில் வாடி வருகின்றனர்.

வாட்டிய வறுமை : தூக்கில் தொங்கிய ஆட்டோ டிரைவர்!

இந்நிலையில் பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் குமார் ரவி என்பவர் தவணை முறையில் ஆட்டோ ஒன்றை வாங்கி ஓட்டி வந்துள்ளார். ஊரடங்கால் வேலையை இழந்த அவர் கடந்த 3 மாதமாக தவறாமல் கடன் தொகையை செலுத்தி வந்துள்ளார். இருப்பினும் ஒரு கட்டத்திற்கு மேலே வறுமையை சமாளிக்க முடியாததால் ரவி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வாட்டிய வறுமை : தூக்கில் தொங்கிய ஆட்டோ டிரைவர்!
Shadow of sad man hanging suicide. light and shadow

குமார் ரவி தற்கொலை செய்து கொண்ட நிலையில், மாவட்ட அரசு அதிகாரிகள் அவரது இல்லத்திற்கு சென்று 25 கிலோ அரிசி மற்றும் கோதுமையை நிவாரணமாக வழங்கினர். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை செய்து கொண்ட ரவிக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.