பணியிழந்த ஆட்டோ ஓட்டுநர்: பள்ளி நிர்வாகத்தின் நடவடிக்கையால் எடுத்த விபரீத முடிவு!

 

பணியிழந்த ஆட்டோ ஓட்டுநர்: பள்ளி நிர்வாகத்தின் நடவடிக்கையால் எடுத்த விபரீத முடிவு!

கேரளவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர், வேலையை இழந்ததால் மன உளைச்சலில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே இருக்கும் மரதெர் பகுதியில் வசித்து வந்தவர் ஸ்ரீகுமார். இவர் அதே பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் கிட்டத்தட்ட 16 ஆண்டுகளாக ஓட்டுநராக பணியாற்றி வந்திருக்கிறார். கொரோனாவால் பள்ளி மூடப்பட்ட சமயத்தில், ஸ்ரீகுமார் உட்பட 86 பேரை பள்ளி நிர்வாகம் வேலையை விட்டு நீக்கியுள்ளது. அதில், ஸ்ரீகுமாரின் மனைவியும் ஒருவர்.

பணியிழந்த ஆட்டோ ஓட்டுநர்: பள்ளி நிர்வாகத்தின் நடவடிக்கையால் எடுத்த விபரீத முடிவு!

ஸ்ரீகுமாரைப் போலவே பள்ளியில் இருந்து நீக்கப்பட்ட பலரின் குடும்பங்கள் வறுமையால் வாடிய நிலையில், பாதிக்கப்பட்டோர் பள்ளி நிர்வாகத்துடன் முறையிட்டுள்ளனர். அப்போது, ஒப்பந்தத்தின் அடிப்படையில் மீண்டும் பணியமர்த்துவதாக பள்ளி நிர்வாகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு மாறாக பள்ளி நிர்வாகம் வேறு சிலரை பணியமர்த்தி இருக்கிறது. இதனால் ஸ்ரீகுமார் மன உளைச்சலில் இருந்திருக்கிறார்.

இந்த நிலையில், ஸ்ரீகுமார் தனது ஆட்டோவுடன் பள்ளி வாசலில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ஸ்ரீகுமாரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் இழப்பீடு தருவதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.