ஈரோடு: கிசான் திட்ட முறைகேட்டில் 4 ஆயிரத்து 250 விண்ணப்பங்களை தீவிரமாக ஆய்வு செய்யும் அதிகாரிகள்!

ஈரோடு: கிசான் திட்ட முறைகேட்டில் 4 ஆயிரத்து 250 விண்ணப்பங்களை தீவிரமாக ஆய்வு செய்யும் அதிகாரிகள்!

பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ 6 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டத்தில் தமிழகத்தில் 2 பல மாவட்டங்களில் போலியாக விவசாயிகள் சேர்க்கப்பட்டு கோடிக்கணக்கில் முறைகேடு நடந்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் இந்தத் திட்டத்தில் 580 போலி விவசாயிகளின் கணக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதோடு ரூ.11 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 85 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் குறிப்பாக கடந்த ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு பெற்ற 4250 விண்ணப்பங்களில் தான் மோசடி நடந்திருக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஈரோடு: கிசான் திட்ட முறைகேட்டில் 4 ஆயிரத்து 250 விண்ணப்பங்களை தீவிரமாக ஆய்வு செய்யும் அதிகாரிகள்!

இந்த விண்ணப்பங்களில் உள்ள முகவரி, சர்வே எண், ஆதார் எண், சிட்டா, அடங்கல் உள்ளிட்டவைகளை வைத்து கடந்த ஒரு வாரமாக கள ஆய்வு நடத்தப்பட்டு வருகிறதுசத்தியமங்கலம் தாளவாடி ஆகிய வட்டாரங்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர் இந்த ஆய்வின் முடிவுகள் இன்று மாலைக்குள் முடிக்கப்பட்டு விசாரணை இறுதி செய்யப்படும் என்று வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட வேளாண் அதிகாரிகள் கூறும்போது, ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 85 ஆயிரம் விவசாயிகள் பிரதமரின் கிசான் திட்டத்தில் இணைந்துள்ளனர். இந்த திட்டத்தில் மற்ற மாவட்டங்களில் போல் பெரிய அளவில் மோசடி நடந்திருக்க வாய்ப்பில்லை. கடைசியாக அதாவது ஏப்ரல் மாதத்திற்கு பிறகுஇத்திட்டத்தில் 4250 பேர் இணைந்துள்ளனர். இதில் தான் தவறு நடந்திருக்க வாய்ப்புள்ளது.

ஈரோடு: கிசான் திட்ட முறைகேட்டில் 4 ஆயிரத்து 250 விண்ணப்பங்களை தீவிரமாக ஆய்வு செய்யும் அதிகாரிகள்!

இதுகுறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதன் பிறகுதான் இது திட்டத்தில் முழுமையாக எவ்வளவு முறைகேடு நடந்துள்ளது தெரிய வரும் என்றனர்.