அங்கீகரிக்கப்பட்ட கொரோனா பரிசோதனை மையத்தை கண்டறிய கூகுள் நிறுவனம் புதிய அம்சம் சேர்ப்பு

 

அங்கீகரிக்கப்பட்ட கொரோனா பரிசோதனை மையத்தை கண்டறிய கூகுள் நிறுவனம் புதிய அம்சம் சேர்ப்பு

கூகுள் இணையதளம் மற்றும் கூகுள் மேப்ஸ் ஆகியவற்றில் ஒரு புதிய அம்சத்தை அந்நிறுவனம் சேர்த்துள்ளது.

அதாவது கொரோனா பரிசோதனை மையங்களைக் கண்டறிய உதவும் வகையில் இந்த அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள கொரோனா வைரஸ் பரிசோதனை மையங்கள் தொடர்பான தகவல்களை கூகுள் மற்றும் கூகுள் மேப்ஸ் ஆகியவற்றில் வழங்க இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) மற்றும் மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட கொரோனா பரிசோதனை மையத்தை கண்டறிய கூகுள் நிறுவனம் புதிய அம்சம் சேர்ப்பு

ஆகவே பயனர்கள் ஆங்கிலம், இந்தி மற்றும் 7 பிற பிராந்திய மொழிகளில் கொரோனா பரிசோதனை மையங்களை கூகுள் மற்றும் கூகுள் மேப்ஸில் தேடலாம். ஆனால் கொரோனா பரிசோதனை செய்ய ஏதேனும் ஆய்வகங்கள் அல்லது மையங்களுக்குச் செல்வதற்கு முன்பு மருத்துவரின் பரிந்துரை வைத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. கூகுள் மேப்ஸ் மற்றும் கூகுள் தேடுபொறியில் கொரோனா வைரஸ் பரிசோதனை அல்லது கோவிட்-19 பரிசோதனை என்ற வார்த்தைகளை ஆங்கிலத்தில் பதிவிட்டு தேடினால் உரிய பதில்கள் கிடைக்கும். அவ்வாறு தேடும்போது அங்கீகரிக்கப்பட்ட மையங்களை முதலில் பயனர்களுக்கு காட்டும் வகையில் கூகுள் நிறுவனம் அவற்றை வடிவமைத்துள்ளது.