#AusvInd ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டி மழையால் பாதிப்பு

 

#AusvInd ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டி மழையால் பாதிப்பு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டி கிரிக்கெட் போட்டி மழையால் பாதிப்பு ஏற்பட்டு நிறுத்து வைக்கப்பட்டுள்ளது

சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டி கிரிக்கெட் போட்டி மழையால் பாதிப்பு ஏற்பட்டு நிறுத்து வைக்கப்பட்டுள்ளது.

சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீசை புரட்டியெடுத்த இந்திய அணி அதே உற்சாகத்தோடு, டெஸ்ட், ஒரு நாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளது. முதலில் மூன்று போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடர் நடைபெறுகிறது.

அதன்படி, இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேன் நகரில் இன்று நடைபெற்று வருகிறது. அதில், டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.

தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணியின் தொடக்க பேட்ஸ்மேன்களாக ஃபின்ச் மற்றும் ஷார்ட் களமிறங்கினர். அந்த அணியின் ஸ்கோர் 24 ஆக இருந்த போது,  கலீல் அஹ்மத் வீசிய முதல் பந்திலேயே டேர்சி ஷார்ட் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். பின்னர் கேப்டன் ஆரோன் ஃபின்ச் உடன் க்ரிஸ் லின் ஜோடி சேர்ந்தார். குல்தீப் ஓவரில், கலீலிடம் கேட்ச் கொடுத்து 27 ரன்களில் ஃபின்ச் வெளியேறினார். அணியின் ஸ்கோர் 75-ஆக இருந்த போது, 37 ரன்களில் க்ரிஸ் லின் அவுட்டானார். அடுத்து வந்த மேக்ஸ்வெல் அதிரடியாக ஆடி வந்தார்.

இந்நிலையில், பிரிஸ்பேனில் மழை பெய்ததால், இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் இடையேயான ஆட்டம் பாதிக்கப்பட்டது. மேக்ஸ்வெல் 46 ரன்களுடனும், ஸ்டோனிஸ் 30 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் மூன்று விக்கெட்டுகள் இழப்பிற்கு 152-ஆக உள்ளது.