187 – இந்தியாவுக்கு வெற்றி இலக்கு

 

187 – இந்தியாவுக்கு வெற்றி இலக்கு

இன்று, இந்திய – ஆஸ்திரேலியா டி20 போட்டியின் மூன்றாம் ஆட்டம் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, முதலில் பவுலிங் செய்ய முடிவெடுத்தார். அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் ஆடியது.

187 – இந்தியாவுக்கு வெற்றி இலக்கு

இந்திய அணியில் மாற்றம் ஏதும் இல்லை. பும்ரா, மயங் அகர்வால் சேர்க்கப்படுவார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு அடக்க வில்லை. இம்முறையும் நடராஜன் அணியில் இடம்பிடித்துள்ளார். இந்தப் போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்தால் தொடர் நாயகன் பட்டம் வெல்லும் வாய்ப்பு நடராஜனுக்கு உள்ளது.

ஆஸ்திரேலிய அணியில், ஆரோன் பின்ச் மீண்டும் களம் கண்டுள்ளார். ஆனால், ரன் ஏதும் எடுக்காமல் வாஷிங்டன் சுந்தர் பந்து வீச்சில் விக்கெட்டைப் பறிகொடுத்தார்.

187 – இந்தியாவுக்கு வெற்றி இலக்கு

மாத்யூ வேட் மற்றும் ஸ்மித் ஜோடி நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தது. ஸ்மித் 24 ரன்கள் எடுத்திருந்த நிலையில், வாஷிங்டன் சுந்தர் பந்து வீச்சில் போல்டாகி ஆட்டமிழந்தார் ஸ்மித்.

187 – இந்தியாவுக்கு வெற்றி இலக்கு

மறுபக்கம் மாத்யூ வேட் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தார். அவர் 11-வது ஓவரில் வேட் விக்கெட்டை வீழ்ந்திருக்க வேண்டும். நடராஜன் வீசிய பந்தில் எல்.பி.டபுள்யூ முறையில் ஆட்டமிழந்திருக்க வாய்ப்பு இருந்தது. ஆனால், டி.ஆர்.எஸ் முறைக்கு நடுவர் அனுமதிக்க வில்லை. காரணம், பெரிய திரையில் ஒருமுறை பார்த்துவிட்டு கேட்டதால், வேட் ஆட்சேபம் தெரிவித்ததால்.

100 ரன்களைக் கடக்க, 12 ஓவர்களை எடுத்துக்கொண்டது ஆஸ்திரேலிய அணி. அடுத்து இறங்கிய மேக்ஸ்வெல் இந்திய பவுலர்களின் பந்துகளை வெளுத்து வாங்கினார். வேட் 53 பந்துகளில் 80 ரன்கள் குவித்திருந்த நிலையில் ஷர்துல் தாகூர் வீசிய பந்தில் அவுட்டானார்.

187 – இந்தியாவுக்கு வெற்றி இலக்கு

இறுதி ஓவரை வீச வந்தார் நடராஜன். முதல் பந்திலேயே அதிரடியாக ஆடி வந்த மேக்ஸ்வெல் விக்கெட்டை வீழ்த்தினார். மேக்ஸ்வெல் 36 பந்துகளில் 54 ரன்கள் குவித்திருந்தார்.

இறுதியாக 20 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 186 ரன்களைக் குவித்தது. இந்திய அணிக்கான வெற்றி இலக்கு 187.