கொரோனா விளைவு: ஆஸ்திரேலியா – ஜிம்பாப்வே ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு

 

கொரோனா விளைவு: ஆஸ்திரேலியா – ஜிம்பாப்வே ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு

மெல்போர்ன்: கொரோனா பரவல் காரணமாக ஆஸ்திரேலியா – ஜிம்பாப்வே ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் மாதம் ஆஸ்திரேலியாவில் நடப்பதாக முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. 2003-2004 காலகட்டத்திற்கு பின்பு ஜிம்பாப்வே அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடவில்லை. இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக ஆஸ்திரேலியா – ஜிம்பாப்வே ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா விளைவு: ஆஸ்திரேலியா – ஜிம்பாப்வே ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு

ஆஸ்திரேலியாவில் புதியதாக கொரோனா பாதிப்புகள் ஏற்படத் தொடங்கியுள்ளதால் இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் ஒருமனதாக இந்த முடிவை எடுத்துள்ளன. இந்த ஒருநாள் தொடரை பின்னர் நடத்தலாம் என்று தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுவரை ஆஸ்திரேலியாவில் 7500-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் இதுவரை 104 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் 7000-க்கும் மேற்பட்டோர் அந்நாட்டில் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.