ஆஸ்திரேலியா Vs இங்கிலாந்து – தொடர் யாருக்கு… முடிவு செய்யும் முக்கியப் போட்டி இன்று

 

ஆஸ்திரேலியா Vs இங்கிலாந்து – தொடர் யாருக்கு… முடிவு செய்யும் முக்கியப் போட்டி இன்று

இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி. இதில் மூன்று டி20 போட்டிகளும் மூன்று ஒருநாள் போட்டிகளும் ஆடத் திட்டமிட்டுள்ளன இருஅணிகளும்.

முதலில் நடைபெற்ற டி20 தொடரில் முதல் 2 போட்டிகளை வென்று இங்கிலாந்து தொடரைக் கைப்பற்றியது. கடைசி மற்றும் மூன்றாம் போட்டியில் மட்டும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றதே அந்நாட்டு ரசிகர்களுக்கு ஆறுதலாக இருந்தது.

ஆஸ்திரேலியா Vs இங்கிலாந்து – தொடர் யாருக்கு… முடிவு செய்யும் முக்கியப் போட்டி இன்று

இந்நிலையில் ஒருநாள் தொடங்கிய முதல் போட்டியில் அசத்தலான வெற்றியைப் பெற்றுள்ளது ஆஸ்திரேலிய அணி.

முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணியில் மிட்சேல் மார்ஸ் 73 ரன்களும் மேக்ஸ்வெல் 77  ரன்களும் விளாசியதால் 294 ரன்கள் எடுத்திருந்தது.

அடுத்து ஆடிய இங்கிலாந்து அணியில் பர்ஸ்டோ 84 ரன்களையும் பில்லிங்  118 ரன்கள் குவித்தனர். ஆனால், 50 ஓவர் முடிவில் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 275 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது இங்கிலாந்து அணி வீரர்களால். 

ஆஸ்திரேலியா Vs இங்கிலாந்து – தொடர் யாருக்கு… முடிவு செய்யும் முக்கியப் போட்டி இன்று

இதனால், மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1:0 எனும் கணக்கில் ஆஸ்திரேலிய அணி முன்னிலை வகிக்கிறது. இன்றைய போட்டியில் அது வென்றுவிட்டால் தொடரையும் கைப்பற்றிவிடும்.

இங்கிலாந்து அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த போட்டியையும் வென்று தொடரைக் கைப்பற்ற முடியும் என்ற நெருக்கடியில் உள்ளது. எனவே இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்பு நிச்சயம் இருக்கும்.

ஆஸ்திரேலியா Vs இங்கிலாந்து – தொடர் யாருக்கு… முடிவு செய்யும் முக்கியப் போட்டி இன்று

ஆஸ்திரேலிய தரப்பில் ஆரோன் பின்ச், மிட்சேல் மார்ஸ், மேக்ஸ்வெல் உள்ளிட்டவர்களும் இங்கிலாந்து தரப்பில் பர்ஸ்டோ, ஜாஸன் ராய், பில்லிங் உள்ளிட்டோர் நல்ல ஃபார்மில் இருப்பதால் ஆட்டத்தில் நிச்சயம் அனல் பறக்கும்.

இன்றைய போட்டியில் டாஸ் வின் பண்ணிய இங்கிலாந்து அணி, முதலில் பேட்டிங் எடுத்துள்ளது. ஓப்பனிங் வீரர்களாக ஜாஸன் ராய் மற்றும் பர்ஸ்டோ இறங்கினார்கள். முதல் ஒருநாள் போட்டியில் விளாசிய பர்ஸ்டோ இன்று 7 பந்துகளைச் சந்தித்து ஒரு ரன்கூட எடுக்காமல் டக் அவுட்டாகி விட்டார்.

ஆஸ்திரேலியா Vs இங்கிலாந்து – தொடர் யாருக்கு… முடிவு செய்யும் முக்கியப் போட்டி இன்று

ஆனால், ஜாஸன் ராய் நிதானமான தன் ஆட்டத்தை மேற்கொண்டிருக்கிறார். ஜோ ரூட் மூன்றாம் ஆட்டக்காரராக களம் இறங்கியிருக்கிறார்.

இங்கிலாந்து 6 ஓவர்களுக்கு 29 ரன்களை எடுத்து, தொடர்ந்து ஆடி வருகிறது.