16 நாட்கள் விடுமுறை… ஆகஸ்ட் மாதத்தின் வங்கி விடுமுறை பட்டியல்!

 

16 நாட்கள் விடுமுறை… ஆகஸ்ட் மாதத்தின் வங்கி விடுமுறை பட்டியல்!

நாளை ஆகஸ்ட் மாதம் துவங்கவுள்ள நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் 16 தினங்களுக்கு வங்கிகளுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை நாட்களாக இருக்கின்றன என்கிற தகவலால் பொதுமக்கள் இப்போதே அதிர்ச்சியடைய துவங்கியுள்ளனர். ஏற்கெனவே பல வங்கிகளும், ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுப்பதற்கு கட்டணங்களை வசூலித்து வரும் நிலையில், எஸ்.பி.ஐ வங்கியும், தனது வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுப்பதற்கு கட்டணங்களை அறிவித்துள்ளது.

இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள வங்கிகளிலும் மாதத்தில் 16 நாள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளன. ஞாயிறு மற்றும் இரண்டாவது நான்காவது சனிக்கிழமைகளும் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டாலும் ATM-ல் இருந்து பணம் எடுப்பதில் எந்த பிரச்சனையும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை பட்டியல்

ஆகஸ்ட் 1 – பக்ரிட்
2 ஆகஸ்ட் – ஞாயிறு
ஆகஸ்ட் 3 – ரக்ஷா பந்தன்
ஆகஸ்ட் 8 – இரண்டாவது சனிக்கிழமை
9 ஆகஸ்ட் – ஞாயிறு
ஆகஸ்ட் 11 – ஸ்ரீ கிருஷ்ணா ஜன்மாஷ்டமி
ஆகஸ்ட் 12 – ஸ்ரீ கிருஷ்ணா ஜன்மாஷ்டமி
ஆகஸ்ட் 13 – இம்பால் தேசபக்தர்கள் தினம்
ஆகஸ்ட் 15 – சுதந்திர தினம்
16 ஆகஸ்ட் – ஞாயிறு
ஆகஸ்ட் 20 – ஸ்ரீமந்த சங்கரதேவ்
ஆகஸ்ட் 21 – ஹரிட்டலிகா டீஜ்
ஆகஸ்ட் 22 – கணேஷ் சதுர்த்தி, நான்காவது சனிக்கிழமை
23 ஆகஸ்ட் – ஞாயிறு
ஆகஸ்ட் 29 – கர்மா பூஜை
ஆகஸ்ட் 31 – இந்திரயாத்ரா மற்றும் திரு ஓணம்