ஆகஸ்ட்டில் கார் விற்பனை உயர்வு – முன்னணி நிறுவனங்களின் கார் விற்பனை அதிகரிப்பு

ஆகஸ்ட்டில் கார் விற்பனை உயர்வு – முன்னணி நிறுவனங்களின் கார் விற்பனை அதிகரிப்பு

நாட்டில் கார் விற்பனை ஆகஸ்ட் மாதத்தில் கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில், ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு, கடும் விற்பனை வீழ்ச்சியை சந்தித்த கார் நிறுவனங்கள், பின்னர் மே மாத த்திற்கு பிறகு படிப்படியாக சரிவிலிருந்து மீள தொடங்கின. எனினும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் கார் விற்பனையில் வளர்ச்சியை காண முடியாத நிலை நீடித்து வந்தது. இந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தில், முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்கள் விற்பனையில் வளர்ச்சியை கண்டுள்ளன.

ஆகஸ்ட்டில் கார் விற்பனை உயர்வு – முன்னணி நிறுவனங்களின் கார் விற்பனை அதிகரிப்பு
மாருதி

மாருதி 20 % – ஹூண்டாய் 19.9 %

ஆகஸ்ட்டில் கார் விற்பனை உயர்வு – முன்னணி நிறுவனங்களின் கார் விற்பனை அதிகரிப்பு
ஹூண்டாய்

முன்னணி நிறுவனமான மாருதி, 1 லட்சத்து 16 ஆயிரத்து 704 கார்களை ஆகஸ்டில் விற்பனை செய்துள்ளது. இது கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாத விற்பனையுடன் ஒப்பிடுகையில், 20.2 சதவீத வளர்ச்சி ஆகும். மற்றொரு முன்னணி நிறுவனமான ஹூண்டாய், ஆகஸ்டில், 45 ஆயிரத்து 809 கார்களை விற்பனை செய்துள்ளது. இது 19.9 சதவீத விற்பனை உயர்வு ஆகும்.

ஆகஸ்ட்டில் கார் விற்பனை உயர்வு – முன்னணி நிறுவனங்களின் கார் விற்பனை அதிகரிப்பு
மகிந்திரா

மகிந்திரா –
ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 13 ஆயிரத்து 651 வாகனங்களை மகிந்திரா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இது 2019 ஆகஸ்ட் உடன் ஒப்பிடுகையில் ஒரு சதவீத வளர்ச்சியாகும்.

ஆகஸ்ட்டில் கார் விற்பனை உயர்வு – முன்னணி நிறுவனங்களின் கார் விற்பனை அதிகரிப்பு
டொயோட்டா

டொயோட்டா
2019 ஆகஸ்ட் மாத விற்பனை உடன் ஒப்பிடுகையில், கடந்த ஆகஸ்டில் டொயோட்டா நிறுவனத்தின் கார் விற்பனை 48 சதவீத சரிவை சந்தித்த போதிலும், கடந்த ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் விற்பனை உயர்ந்துள்ளதை அறிய முடிகிறது. ஜூலையில் 5 ஆயிரத்து 386 கார்களை விற்பனை செய்திருந்த நிலையில், ஆகஸ்டில் 5 ஆயிரத்து 555 கார்களை டோயோட்டா விற்பனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.- முத்துக்குமார்