ஆடி வெள்ளி, ஆடி அமாவாசை – தருமபுரி மாவட்ட கோவில்களில் பக்தர்கள் தரிசனம் ரத்து!

 

ஆடி வெள்ளி, ஆடி அமாவாசை – தருமபுரி மாவட்ட கோவில்களில் பக்தர்கள் தரிசனம் ரத்து!

தருமபுரி

தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும், ஆடி வெள்ளி மற்றும் ஆடி அமாவாசை நாட்களில் பொதுமக்கள் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக, ஆட்சியர் திவ்யதர்ஷினி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில், “ஆடி வெள்ளி மற்றும் ஆடி அமாவாசையை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்தது கோவில்களுக்கும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் சுவாமி தரிசனத்திற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது”.

ஆடி வெள்ளி, ஆடி அமாவாசை – தருமபுரி மாவட்ட கோவில்களில் பக்தர்கள் தரிசனம் ரத்து!

“எனவே, பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் நலன் கருதி தருமபுரி மாவட்டத்தில் உள்ள தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில், அதியமான் கோட்டை காலபைரவர் கோவில், வே.முத்தம்பட்டி ஆஞ்சநேயர் கோவில், ஓகேனக்கல் தேசநாதேஸ்வர சுவாமி கோவில், தா.அம்மாபேட்டை சென்னியம்மன் கோவில், நெருப்பூர் முத்தித்தராய சுவாமி கோவில் ஆகிய கோவில்கள் மற்றும் அனைத்து புகராதான கோவில்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் இன்று ஆடி வெள்ளி மற்றும் வரும் ஞாயிற்றுக்கிழமை ஆடி அமாவாசை நாட்களில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது”.

“மேலும், நோய்த்தொற்று பரவலின் காரணமாக ஓகேனக்கல் காவிரி ஆற்றங்கரையில் மற்றும் தா.அம்மாபேட்டை ஆற்றங்கரையில் மக்கள் கூடி வழிபாடு நடத்தவும் அனுமதி இல்லை.மேலும், ஆகம விதிப்படி சுவாமி அலங்காரங்கள், பூஜை புனஸ்கராங்கள் அர்ச்சகர்கள், கோவில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மூலம் தொடர்ந்து நடைபெறும், இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்”.