கோவையில் உரிய ஆவணமின்றி கனிமங்களை ஏற்றிச்செல்ல முயற்சி… கேரள மாநில லாரிகளை சிறைபிடித்த கிராமமக்கள்!

 

கோவையில் உரிய ஆவணமின்றி கனிமங்களை ஏற்றிச்செல்ல முயற்சி… கேரள மாநில லாரிகளை சிறைபிடித்த கிராமமக்கள்!

கோவை

கோவை மாவட்டம் பெரியகுயிலி பகுதிக்கு கனிமவளங்களை ஏற்றிச்செல்ல உரிய ஆவணங்கள் இன்றி வந்த கேரள மாநில லாரிகளை கிராமமக்கள் திருப்பி அனுப்பினர்.

கோவை மாவட்டம் பெரியகுயிலி என்ற இடத்தில் அதிகளவில் கனிமவளங்கள் கிடைப்பதால், ஒரு சில தனியார் நிறுவனங்கள் அரசின் முறையான அனுமதியின்றி இரவு நேரத்தில் லாரிகள் மூலம் மணல் எடுத்துச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனை தடுத்து நிறுத்தக் கோரி அந்த பகுதி பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், கனிம வளத்துறையினர் நடவடிக்கை எடுத்து வந்துள்ளனர். எனினும் முறைகேடாக கனிவளங்களை எடுத்துச்செல்வது தொடந்து வருகிறது.

கோவையில் உரிய ஆவணமின்றி கனிமங்களை ஏற்றிச்செல்ல முயற்சி… கேரள மாநில லாரிகளை சிறைபிடித்த கிராமமக்கள்!

இந்த நிலையில், நேற்றும் வழக்கம்போல் பெரியகுயிலி பகுதியில் உள்ள கனிமவளங்களை எடுப்பதற்காக கேரள மாநிலத்தை சேர்ந்த லாரிகள் வந்துள்ளன. இதனை கண்டு அந்த பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், லாரிகளை முற்றுகையிட்டனர். தொடர்ந்து, லாரி ஓட்டுநரிடம் மணல் எடுப்பதற்கான முறையான ஆவணம் உள்ளதா? என பொதுமக்கள் விசாரித்தனர். அப்போது, உரிய ஆவணங்கள் இல்லாதது தெரியவந்ததால், அந்த லாரிகளை அங்கிருந்து திருப்பி அனுப்பினர்.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், பெரியகுயிலி பகுதியில் உள்ள கனிமவளங்களை எடுப்பதற்காக தினமும் 100-க்கும் மேற்பட்ட லாரிகள் வருவதால் பொதுக்களுக்கு இடையூறாக உள்ளதாகவும், எனவே இதனை தடுத்த நிறுத்த வேண்டுமென அந்த பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.