சங்கரன்கோவிலில் தடையை மீறி கோவிலுக்குள் நுழைய முயன்ற, இந்து முன்னணியினர் கைது!

 

சங்கரன்கோவிலில் தடையை மீறி கோவிலுக்குள் நுழைய முயன்ற, இந்து முன்னணியினர் கைது!

தென்காசி

சங்கரன்கோவிலில் தடையை மீறி ஆலய நுழைவு போராட்டம் நடத்த முயன்ற இந்து முன்னணி கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கர நாராயணசாமி கோவிலில் ஆடித்தபசு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்றும், நிகழ்ச்சியை யூடிபில் நேரலை செய்யப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது.

மேலும், பொதுமக்கள் யாரும் வராத வகையில் சங்கரன்கோவில் பகுதியில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து, நடந்த ஆடித்தபசு விழாவில் கோயில் மண்டகப்படிதாரர்கள் 50 பேர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

சங்கரன்கோவிலில் தடையை மீறி கோவிலுக்குள் நுழைய முயன்ற, இந்து முன்னணியினர் கைது!

இந்த நிலையில், ஆடித்தபசு நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி வழங்க கோரி இந்து முன்னணி மாநில துணை தலைவர் ஜெயக்குமார், மாநில செயலாளர் குற்றாலநாதன் தலைமையில் 50 பேர், ஸ்ரீகோமதி அம்மாள் மோவிலுக்குள் நுழைய முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதனை அடுத்து, கோவிலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினர். ஆனால், அவர்கள் கலைந்து செல்ல மறுத்துவிட்டதால் ஜெயக்குமார், குற்றாலநாதன் உள்ளிட்ட நிர்வாகிகளை கைதுசெய்து, திருமண மண்டபத்தில் அடைத்தனர். தொடர்ந்து, மாலை அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.