முடங்கிப் போன ஏடிஎம்கள்!

 

முடங்கிப் போன ஏடிஎம்கள்!

மார்ச் 31ஆம் தேதி முதல் ஏப்ரல் 4ஆம் தேதி வரை வங்கிகள் சேவை தடைபட்டுள்ளது. இந்த 5 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதால் ஏடிஎம்மில் பண பற்றாக்குறை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே கடந்த மாத இறுதியில் வங்கி ஊழியர்கள் போராட்டம் நடத்தியதால் நான்கு நாட்கள் வங்கிகள் செயல்படாமல் மக்கள் திண்டாடினர். தேர்தல் நேரத்தில்தற்போது தொடர்ச்சியாக கிட்டத்தட்ட ஒரு வாரம் விடுமுறை வரவிருப்பதால் பண பரிவர்த்தனைகள் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

முடங்கிப் போன ஏடிஎம்கள்!

தமிழகம் முழுவதும் பெரும்பாலான ஏ.டி.எம்.கள் முடங்கிப் போயுள்ளன. மார்ச் 31 வருடாந்திர கணக்கு முடிவு, ஏப்ரல் 1 வருடாந்திர கணக்கு துவக்கம், ஏப்ரல் 2 புனித வெள்ளி விடுமுறை இவற்றைத் தொடர்ந்து நேற்றுதான் அரசு ஊழியர்களின் சம்பளம் அவரவர் வங்கிக் கணக்கிற்கு வந்துள்ளது. இன்று ஞாயிற்றுக் கிழமை ஈஸ்டர் பண்டிகை. மாதச்செலவினம், பண்டிகை காலச் செலவு என பொதுமக்கள் தேவைக்கான பணத்தை எடுக்க ஏ.டி.எம்.களை முற்றுகையிட்டு வரும் நிலையில் ஏகப்பட்ட ஏ டி எம்-கள் முடங்கிப் போயுள்ளன.