atk mohun bagan அணிக்கு மூன்றாம் வெற்றி – ஒடிசா தோல்வி

 

atk mohun bagan அணிக்கு மூன்றாம் வெற்றி – ஒடிசா தோல்வி

கால்பந்து ரசிகர்களுக்கு விருந்தாக ISL கால்பந்து திருவிழாவில் தினமும் ஒரு போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று இரவு 7.30 மணிக்கு கோவாவின் ஃபேட்ரோடா மைதானத்தில் atk mohun bagan Vs ஒடிசா அணிகளுக்குமான போட்டி நடந்தது.

atk mohun bagan அணி ஏற்கெனவே 2 போட்டிகளில் ஆடி இரண்டிலும் வென்று முன்னிலை பெற்று வந்தது. அந்த நம்பிக்கையில் மீண்டும் களத்தில் ஒடிசாவை எதிர்கொண்டது.

atk mohun bagan அணிக்கு மூன்றாம் வெற்றி – ஒடிசா தோல்வி

ஒடிசா அணியோ தான் ஆடிய 2 போட்டிகளிலும் டிராவாகி பாயிண்ட் டேபிளில் பின் தங்கியிருந்தது. அதனால், நேற்றைய ஆட்டத்தின் வெற்றி அவசியம் எனப் போராடும் முனைப்பில் இருந்தது.

இரு அணிகளும் கடுமையாகப் போராடியதால் எந்த அணிக்கும் கோல் விழுவது சிரமமாக இருந்தது. முந்தைய நாள் ஹைதராபாத் Vs ஜாம்ஷெட்பூர் போட்டியில் நடந்ததுபோல போட்டி வெற்றித் தோல்வி இல்லாமல் முடிந்துவிடுமோ என்று எதிர்பார்க்கப்பட்டது.

atk mohun bagan அணியில் ராய் கிருஷ்ணா இருக்கும்போது அது எப்படித் தோற்கும் என்று சொல்லும் விதமாக அசத்தலான கோல் அடித்தார். இதன்மூலம் atk mohun bagan வெற்றி வாகை சூடியது.

atk mohun bagan அணிக்கு மூன்றாம் வெற்றி – ஒடிசா தோல்வி

இப்போதைய பாயிண்ட் டேபிளில், atk mohun bagan அணி மூன்று போட்டிகளில் ஆடி, மூன்றிலும் வென்று 9 புள்ளிகளோடு முதல் இடத்தில் இருக்கிறது. அதைத் தொடர்ந்து மும்பை சிட்டி அணி, மூன்றில் ஆடி இரண்டில் வென்று ஒன்றில் தோற்று 8 புள்ளிகளோடு இரண்டாம் இடத்தில் உள்ளது.

நார்த் ஈஸ்ட் அணி மூன்றில் ஆடி, ஒன்றில் வென்று இரண்டில் டிராவாகி 5 புள்ளிகளோடு மூன்றாம் இடத்தில் உள்ளது.